Disease Vaccination Camp for female Calves: Perambalur Collector Notice!

பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின் நடப்பு ஆண்டிற்கான மூலம் 15.02.2024 முதல் 15.03.2024 வரை கருசிதைவு நோய்க்கான தடுப்பூசி முகாம், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் நடைபெற உள்ளது. வாழ்நாள் எதிர்ப்பு சக்தி கொண்ட தடுப்பூசி என்பதால் ஒருமுறை தடுப்பூசி செலுத்துவது போதுமானது.

நான்கு மாதம் முதல் 8 மாதம் வயது வரை உள்ள கிடேரி கன்றுகளுக்கு இந்த தடுப்பூசி பணி இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே அனைத்து கால்நடை வளர்ப்போர் தங்கள் கிராமத்தில் கருசிதை நோய் தடுப்பூசிப்பணி மேற்கொள்ள வரும் பொழுது முகாமில் கலந்து கொண்டு தங்கள் கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெறும்படி கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!