தனியார் ஆம்புலன்ஸ் டிரைவரிடம் பேரம் பேசிய 108 ஆம்புலனஸ் டிரைவர் டிஸ்மிஸ்

schedule
2019-01-28 | 13:54h
update
2019-01-28 | 13:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

dismissed 108 ambulance driver for the bargaining to Private ambulance driver

நாமக்கல்லில் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவரிடம் பேரம் பேசியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வாகன டிரைவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

Advertisement

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்தவர்கள் 5 பேர் ஒரு காரில் ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் கடந்த 24ஆம் தேதி இரவு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

நாமக்கல் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கீரம்பூர் சுங்கச்சாவடி அருகே அந்த கார் வந்தபோது எதிர்பாராத விதமாக தடுப்பு சுவர் மீது மோதி விபத்தில் சிக்கியது.

இதில் காயம் அடைந்தவர்களை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல நாமக்கல்லைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் வாகன டிரைவர் கவுரிசங்கர் என்பவர் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவரிடம் ரூ.1,000 பேரம் பேசியதாக சமூக வலைதளங்களில் ஆடியோ வெளியானது.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வாகன நிர்வாகிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பேரம் பேசியது உண்மை என தெரியவந்ததால், 108ம் ஆம்புலன்ஸ் டிரைவர் கவுரிசங்கரை பணிநீக்கம் செய்து மண்டல மேலாளர் ரவிராஜன் உத்தரவிட்டார்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.01.2026 - 02:44:38
Privacy-Data & cookie usage: