பெரம்பலூர் அருகே மது அருந்திய போது தகராறு; நண்பனின் உயிர்காக்க உடனடியாக வராத 108 ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைப்பு!

schedule
2023-07-31 | 17:50h
update
2023-07-31 | 18:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Dispute over liquor near Perambalur; The 108 ambulance that did not come immediately to save the friend’s life broke the glass!

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் அருகே உள்ள களரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் சந்திரன் (22), இவர் அவரது நண்பர்களான சுப்பிலமணியன் மகன் சுரேந்தர், ரவி மகன் ரகுநாத், அம்மாபாளைத்தை சேர்ந்த அருள் மற்றும் காமராஜ் மகன் பிரவீன்குமார் (27) ஆகியோர் மருதையான் கோயில் ஓடை அருகே இன்று மதியம் மது அருந்தி கொண்டு இருந்துள்ளனர். அப்போது, மதுபோதையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சந்திரன் அந்த இடத்தை விட்டு, சென்றதாக கூறப்படுகிறது.

போதையில் இருந்த மற்ற நண்பர்கள் களரம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே வந்த போது, பக்கத்து வீட்டுக்காரர் போன் செய்து நீங்கள் மது அருந்திய இடத்தின் அருகே சற்று தொலைவில் சந்திரன் தனது கைலியால் மரத்தில் தூக்கு மாட்டி கொண்டிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். உடனே சென்ற நண்பர்கள் சந்திரனை மீட்டு, பைக்கில் வைத்து அம்மாபாளையம் ஆரம்ப சுகாதரா நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

Advertisement

மருத்துவர் வைத்தியம் செய்து கொண்டிருக்கும் பொழுதே பெரம்பலூர் செல்ல வேண்டும், 108 ஆம்புலன்சை எடுக்க கோரி தகராறு செய்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மணிகண்டன் 108க்கு போன் செய்யுங்கள் நான் வருகிறேன் தெரிவித்துக் கொண்டிருக்கும் போதே, பிரவீன்குமார் கல்லை எடுத்து ஆம்புலன்ஸின் முன் பக்க கண்ணாடியை அடித்து உடைத்து விட்டு சந்திரனை பைக்கிலேயே பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு சேர்த்த போது அவர் இறந்து விட்டதாக அங்கிருந்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வழக்குப் பதிவு செய்த போலீசார் சந்திரனின் உடல் உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் வைத்துள்னர். ஆம்புலன்ஸ் டிரைவர் கொடுத்த புகாரின் பேரில் ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்த பிரவீன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.09.2026 - 02:15:55
Privacy-Data & cookie usage: