தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு தேர்வாகி உள்ள மாணவி திரிஷாவிற்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

schedule
2016-11-23 | 17:48h
update
2026-06-27 | 03:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

To qualify, a student in a national basketball tournament district collector greeting to tirisha

பெரம்பலூர் :

கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் இந்திய பள்ளிகளின் விளையாட்டு கழகத்தின் சார்பில் 2016-17 ஆண்டிற்கான மாநில அளவிலான கூடைப் பந்துப் போட்டியில் கலந்துகொள்ளும் நபர்களுக்கான தெரிவுப்போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டியில் பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவி திரிஷா 17 வயதிற்குட்பட்ட கூடைப்பந்து விளையாட்டுப் விளையாட்டு பிரிவில் கலந்து விளையாடி தமிழக அணிக்கு தேர்வானார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் சட்டீஸ்கர் மாநிலத்தில் இந்திய பள்ளிகளின் விளையாட்டுக் குழுமத்தின் சார்பில் நடத்தப்படவுள்ள தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கூடைப்பந்து விளையாட்டின் தமிழக அணியின் சார்பில் விளையாட உள்ளார்.

தமிழக அணியின் கூடைப்பந்து விளையாட்டுப் பிரிவிற்கு தேர்வாகியுள்ள மாணவி திரிஷா, மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

தமிழ்நாடு அணிக்காக தேர்வாகியுள்ள மாணவியைப் பாராட்டிய மாவட்ட ஆட்சியர் எதிர்காலத்தில் விளையாட்டுத் துறையில் பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம.இராமசுப்பிரமணியராஜா, மாணவியின் தந்தை ஜெ.அரவிந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 03:08:47
Privacy-Data & cookie usage: