மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள்

schedule
2017-03-23 | 18:53h
update
2026-06-30 | 12:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

District-level monthly tournaments

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணியராஜா விடுத்துள்ள தகவல் :

மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் வரும் மார்ச் 25.03.2017 அன்று காலை 8.30 மணி முதல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
மார்ச் மாதத்திற்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகளில் தடகளம், நீச்சல், டேக்வாண்டோ மற்றும் இறகுப்பந்து ஆகிய விளையாட்டுக்கள் இருபாலருக்கும் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள வயது வரம்பு கிடையாது.

Advertisement

போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ – மாணவிகளுக்கு தடகளப் போட்டியில் 100 மீ ஓட்டம், 400 மீ ஓட்டம், 1500 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல். ஆகிய போட்டிகளும் நீச்சல் 50மீ, 100மீ, 200மீ, 400மீ, ப்ரி ஸ்டைல் 50மீ, பேக் ஸ்ட்ரோக் 50 மீ, பிரஸ்ட் ஸ்ட்ரோக், 50மீ பட்டர் பிளை, 200மீ இன்டிவிஜுவல் மிட்லே ஆகிய போட்டிகள் இருபாலருக்கும் நடைபெறவுள்ளளது. இப்போட்டிகளுக்கும் வயது வரம்பு கிடையாது.

குழு போட்டிகளாக இறகுப்பந்து மற்றும் டேக்வாண்டோ ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது.

டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டியில் 14 வயதிற்குட்பட்ட பிரிவில் ஆண்களுக்கு 38, 41, 44, 48 ஆகிய எடைக்குட்பட்ட பிரிவிலும் பெண்களுக்கு 35,38, 41, 44 ஆகிய எடைக்குட்பட்ட பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெறவுள்ளது. வயது வரம்பற்ற பிரிவில் ஆண்களுக்கு 58, 57, 80 மற்றும் 80க்கு மேல் உள்ள எடைப் பிரிவினருக்கும், பெண்களுக்கு 49, 57, 67 மற்றும் 67க்கு மேல் எடையுள்ள பிரிவினருக்கும் போட்டிகள் நடைபெற உள்ளது.

போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் அணிகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்படும். எனவே, அனைத்து பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு உடற்திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.06.2026 - 12:36:41
Privacy-Data & cookie usage: