District-level roller skating competitions in Perambalur!
பெரம்பலூரில் நடந்த மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் 100க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடினர்.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்தில் மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி, ரிங் மேட்ச் போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் அசோசியன் சார்பில் நடத்தப்பட்டது. போட்டிகளை அசோசியன் செயலாளர் ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 5 முதல் 7வயது வரை, 9 வயது, 11 வயது, 14 வயது, 17வயது என வயது வாரியாக ஆண் பெண் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. ஒரு லைன் வீல், இரண்டு லைன் வீல், மூன்று லைன் வீல் என்ற பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று அவர்களது திறமையை வெளிப்படுத்தினர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் ரோடு ரேஸ் என்று சொல்லக்கூடிய சாலையில் நடைபெறும் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் பிரிவு வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்தர்வர்களுக்கு பரிசுகளுடன், பதக்கங்களும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்த போட்டிகளில் பார்வையாளர்கள் திரண்டு வீரர்களை கைதட்டியும், ஆரவாரக் குரல்களை எழுப்பியும் உற்சாகப்படுத்தினர்.