பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி

schedule
2017-09-05 | 02:42h
update
2026-07-03 | 14:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

District-level scientific exhibition at Perambalur Government Higher Secondary School

பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான 45 -வது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

இக்கண்காட்சியினை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்.பி.மருதராஜா (பெரம்பலூர்), மா.சந்திரகாசி (சிதம்பரம்), சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்) ஆர்.டி.ராமச்சந்திரன் (குன்னம்) ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா, நேற்று தொடங்கி வைத்தார்.

இக்கண்காட்சியில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 132 பள்ளிகளை சேர்ந்த 456 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர். இதில் அறிவியல் பிரிவில் 212 படைப்புகளும், கணிதப் பிரிவில் 27 படைப்புகள் என மொத்தம் 239 படைப்புகள் இடம்பெற்றிருந்தது.

இக்கண்காட்சியில் பங்குபெற்ற மாணவ, மாணவிகளின் படைப்புகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளின் செயல்பாடுகள் குறித்தும், அவற்றின் மூலம் சமுதாயத்திற்கு ஏற்படபக்கூடிய நன்மைகள் குறித்தும் மாணவ, மாணவிகளிடையே கேட்டறிந்தனர்

Advertisement

மேலும், நாம் உருவாக்கக்கூடிய அனைத்து படைப்புகளும் சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பயன்பட வேண்டும் என்று கூறிய அவர்கள் படிக்கும் வயதில் இத்தகைய கண்டுப்பிடிப்புகளை உருவாக்க பெரிதும் உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

இக்கண்காட்சியில் சுகாதாரம், சத்துணவு, புதுப்பிக்கதக்க வளம், தொழிற்சாலைகள், விவசாயம், உணவுபாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இக்கண்காட்சிகளை பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

இந்த அறிவியல் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த கணித படிப்புப் பிரிவில் வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் ஜெயக்குமார் முதல் இடத்தையும், குன்னம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ரதிமீனா மற்றும் சங்கீதா ஆகியோர் இரண்டாம் இடத்தையும், லப்பைக்குடிகாடு விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜமுனா ஜாஹீம் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

அறிவியல் படைப்பில் 6 முதல் 9 வகுப்பு வரையிலான பிரிவில் சத்திரமனை அரசு உயர்நிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவி தீபா முதலிடத்தையும், கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 6ம் வகுப்பு மாணவன் சஞ்சய்ராம் இரண்டாம் இடத்தையும், வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவன் பிரவீன்குமார் 3ம் இடத்தையும்,
9லிருந்து 12ம் வகுப்பு பிரிவில் து.களத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவன் வெங்கடேஷ் முதலிடத்தையும், லப்பைக்குடிகாடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவி ரூபினாபேகம் இரண்டாம் இடத்தையும், புதுவேட்டக்குடி அரசு உயா;நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவி அபிநயா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

மேலும் இரு மாணவ மாணவியர்களுக்கான பிரிவில் பீல்வாடி அரசு உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு மாணவர்கள் அருண்குமார் மற்றும் நல்லேந்திரன் முதலிடத்தையும், ரோவர் மேல்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவர்கள் நந்தவர்மா மற்றும் தமிழ்ச்செல்வன் இரண்டாம் இடத்தையும், எறையூர் நேரு மேல்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவர்கள் மோகன்குமார் மற்றும் திவகரன் ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

ஆசிhpயா;களுக்கான படைப்புப் பிரிவில் லப்பைக்குடிகாடு விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் ராம்குமார் மற்றும் முருகேசன் ஆகியோர் முதல் இடத்தைப் பிடித்தனர்.

வெற்றிப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும், இப்போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ மாணவியர் அனைவரும் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான 45வது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி போட்டிகளில் பங்குபெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவி, மாவட்ட கல்வி அலுவலர் பிருதிவிராஜன் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 14:43:13
Privacy-Data & cookie usage: