நாமக்கல்லில் 22, 23 தேதிகளில்அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

schedule
2018-11-17 | 13:55h
update
2026-04-22 | 07:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

District level sports tournaments for government employees on 22 and 23 at Namakkal

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பு :

நாமக்கல் மாவட்ட அரசு அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டி வரும் 22 வியாழன் மற்றும் 23 வெள்ளிக்கிழமை ஆகிய தேதிகளில் காலை 8.30 மணியளவில் நடத்தப்பட உள்ளது. போட்டி ஆண் பெண் இருபாலருக்கும் நடத்தப்பட உள்ளது. தடகளம் (ஆண்களுக்கான போட்டி) : 100மீ, 200மீ, 800மீ, 1500மீ ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டெறிதல், 4 x 100 மீ தொடர் ஓட்டம் நடத்தப்படுகிறது.

தடகளம் (பெண்களுக்கான போட்டி) : 100மீ, ,200மீ, 400மீ, 800மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டெறிதல், 4 x 100 மீ தொடர் ஓட்டம் நடத்தப்படுகிறது. தடகளம் போட்டிகள் 22ம் தேதி காலை 8.30 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கம் நடைபெறுகிறது. கபாடி, வாலிபால் இருபாலருக்கும் நடத்தப்படுகிறது.

Advertisement

கால்பந்து : ஆண்களுக்கு மட்டும் நடத்தப்படுகிறது. கூடைப்பந்து போட்டிகள் இருபாலருக்கும் நாமக்கல் அரசு தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், டென்னிஸ், இறகு பந்து போட்டிகள்: இருபாலருக்கும். – நாமக்கல் ஆபிசர்ஸ் கிளபிலும், டேபிள் டென்னிஸ் போட்டி இருபாலருக்கும். – விக்டோரியா ஹால், நாமக்கலலில் நடைபெறுகிறது. போட்டிகள் 23ம் தேதி காலை 8.30 மணிக்கு மேற்கண்ட இடங்களில் நடைபெறுகிறது.

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மாநில அரசின் அனைத்து துறையிலும் பணிபுரியும் ஊழியர்கள் அனைத்து அலுவலர்களும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.

போலீஸ் துறையில் அமைச்சுப் பணியாளராக பணிபுரியும் பணியாளர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். அரசுப் பள்ளியில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரிய,ஆசிரியைகள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.

நிதிஉதவி பள்ளியில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரிய,ஆசிரியைகள் இப்போட்டியில் கலந்து கொள்ள அனுமதியில்லை. சீருடைப் பணியாளர்கள் இப்போட்டியில் பங்கு பெற அனுமதியில்லை. தற்காலிக, தினக்கூலி பணியாளர்கள் இப்போட்டியில் பங்கு பெற அனுமதியில்லை.

ஆறு மாதத்திற்குள் அரசுப் பணியில் சேர்ந்த பணியாளர்கள் இப்போட்டியில் பங்கு பெற அனுமதியில்லை.தொழில்முறை விளையாட்டு வீரர்கள் அல்லது ஒப்பந்த பணியாளர்கள் இப்போட்டியில் பங்கு பெற அனுமதியில்லை.

பணிபுரியும் அரசுப் பணியாளர்கள், பணிபுரிவதற்கான அடையாள அட்டையை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.04.2026 - 07:22:02
Privacy-Data & cookie usage: