மாவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டிகள்: பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் தொடக்கி வைத்தார்.

schedule
2022-10-14 | 15:27h
update
2022-10-14 | 15:27h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

District Level Team Sports Competitions: Perambalur MLA. Prabhakaran started.

பள்ளிக் கல்வித்துறை சார்பில், பெரம்பலூர் மாவட்ட அளவிலான பாரதியார் தின, குடியரசுதின பழைய குழு விளையாட்டு போட்டிகள், 2022- 23ம் ஆண்டுக்கான போட்டிகள், 14, 17, 19 வயதுக்குப்பட்ட, மாணவர்களுக்கு கபடி கோகோ வாலிபால் கால்பந்து பூப்பந்து எரிப்பந்து கையுந்து பந்து இறகு பந்து ஹாக்கி மேஜைப்பந்து கூடைப்பந்து ஆகிய போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.

Advertisement

இந்த போட்டிகளில் 700 மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு விளையாடினார்கள். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் தர்மபுரி ஈரோடு செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்குபெற உள்ளனர்.

இந்நிகழ்ச்சியின் போது, நகராட்சி துணைத் தலைவர் ஹரி பாஸ்கர், மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 02:18:25
Privacy-Data & cookie usage: