பெரம்பலூரில், ஆண்களுக்கான மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி: தலைவர்  பரமேஷ்குமார் தகவல்!

schedule
2022-06-06 | 19:27h
update
2022-06-06 | 19:27h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

District level volleyball tournament for men in Perambalur: Chairman Parameshkumar Info!

பெரம்பலூர் மாவட்ட வாலிபால் அசோசியேஷன் சார்பில் வரும் ஜீன் 9 வியாழக்கிழமை பெரம்பலூரில், ஆண்களுக்கு மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள், மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. போட்டியை காலை 8.30 மணிக்கு, போலீஸ் எஸ்.பி. ச.மணி தொடங்கி வைக்கிறார்.
போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் – மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி.இராஜேந்திரன் – நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன் ஆகியோர் பரிசுகள்
வழங்குகிறார்கள்.

Advertisement

Perambalur District volleyball association Chairman Parameshkumar


இந்த போட்டியில் பெரம்பலூர் மாவட்ட அளவிலான அணிகள் பங்கேற்கலாம். போட்டியில் வெற்றி பெறும் முதல் இரண்டு அணிகள் 11.06.2022. மற்றும் ‌12.06.2022. அன்று நடைபெறும் மண்டல அளவிலான போட்டியில் பங்கு பெறுவர். இது குறித்து முன் பதிவிற்கு 94434-38912 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

போட்டியில் விளையாட்டுத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள், என மாவட்ட வாலிபால் அசோசியேஷன் தலைவர் பொறியாளர்
இரா. ப.பரமேஷ்குமார்
தெரிவித்துள்ளார்‌.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 19:46:39
Privacy-Data & cookie usage: