தீபாவளி: பொதுமக்கள் விரைவாக செல்ல அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் பேருந்து இயக்கப்படும்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தகவல்.

schedule
2022-10-19 | 16:15h
update
2022-10-19 | 16:15h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Diwali: Buses to be operated from all major cities to facilitate public transport: Tamil Nadu State Transport Corporation informs.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட்., மேலாண் இயக்குநர் ராஜ்மோகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் 24.10.2022 அன்று தீபாவளி பண்டிகையினை சிறப்பாகவும், பாதுகாப்புடனும் கொண்டாட பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பொதுமக்கள் எளிதாக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை முடித்து அவரவர்கள் வேலைக்கு திரும்புவதற்கும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Advertisement

24.10.2022 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட்., கும்பகோணம், பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமம் இன்றி, இடையூறும் இன்றி, பயணம் செய்ய ஏதுவாக சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால் வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு 21.10.2022, 22.10.2022 & 23.10.2022 ஆகிய நாட்களிலும்,

மேலும் திருச்சியில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கு மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு 21.10.2022 முதல் 23.10.2022 வரையும், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 21.10.2022 முதல் 23.10.2022 வரை சென்னையிலிருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில், தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, ஒரத்தநாடு தட பேருந்துகள் , தாம்பரம் சானிடோரியம் (MEPZ) அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்தும். கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் தட பேருந்துகள் கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது.

மேலும் தீபாவளி முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 24.10.2022, 25.10.2022 & 26.10.2022 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 04:15:01
Privacy-Data & cookie usage: