தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தேமுதிக பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்

schedule
2018-01-29 | 09:30h
update
2018-01-30 | 15:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

DMDK Demonstration at Perambalur condemning bus fares hikes

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பாலக்கரை அருகே உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் தொழிற் சங்க துணைப் பேரவைத் துணைச் செயலாளர் பி.வேணுராம், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை.காமராஜ் ஆகியோர் தலைமை வகித்து கண்டன தெரிவித்து உரையாற்றினர்.

Advertisement

பெரம்பலூர் நகர செயலாளர் ஜெயக்குமார், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் தவசி.அன்பழகன், வரவேற்றனர். மாவட்ட பொருளாளர் கண்ணுசாமி, உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பலர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு உயர்த்திய பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், பழைய கட்டணத்தை வசூலிக்க வேண்டும், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை உயர்வையும் கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோசமிட்டனர்.

மாவட்ட அவைத் தலைவர் மா.கணபதி நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 15:24:58
Privacy-Data & cookie usage: