மின் கட்டணம், ஜிஎஸ்டி உயர்வை கண்டித்து, பெரம்பலூரில் தேமுதிக ஆர்ப்பாட்டம்!

schedule
2022-07-27 | 18:06h
update
2022-07-27 | 18:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

DMDK protest in Perambalur to condemn the against increase in electricity bill and GST!

மின் கட்டண உயர்வு, உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் துரை சிவா ஐயப்பன் தலைமையில் நடந்தது.

Advertisement

இதில் சிறப்பாக அழைப்பாளராக கெங்கவள்ளி முன்னாள் எம்.எல்.ஏ சுபாரவி கலந்து கொண்டார். திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு, உணவு பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரி ,தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மாதந்தோறும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் மக்களை ஏமாற்றும் வாக்குறுதியை அளித்த திமுக அரசை கண்டித்து கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் எழுப்பினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் துணைச் செயலாளர்கள் சுகர் செல்வன், ராஜேந்திரன், சங்கர், சோழரசன், செயற்குழு உறுப்பினர்கள் சரவணன், செந்தில்குமார்,
சுரேஷ் ,சீனிவாசன், புகழேந்தி, விஜயகுமார், கருணாநிதி,ஜோதிலட்சுமி சஞ்சீவ் குமார் சிதம்பரம் விஸ்வா பிரேம்குமார் வெங்கடேசன் ஸ்ரீதரன் மணிவண்ணன் சரவணன் கமல் பாட்ஷா தமிழரசி நித்யா செந்தில்குமார் உட்பட தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.05.2026 - 06:59:27
Privacy-Data & cookie usage: