DMK at Paddy Procurement Station compulsory collections! Rs. 60; BJP Petition to Governor and condemning Demonstration announcement!
பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே. நாகராஜ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தஞ்சை, திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நெல்கொள்முதல் நிலையங்களில் தமிழக அரசின் சரியான திட்டமிடல் இல்லாத
காரணத்தினாலும், நிர்வாக திறமையின்மையின் காரணத்தினாலும் விவசாயிகளின் இலட்சக்கணக்கான நெல்மூட்டைகள் கடந்த 15 நாட்களாக கேட்பாரின்றி
கிடக்கின்றன.ஆங்காங்கே பெய்த மழையால் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் வீணாகும் நிலையில் உள்ளன. மேலும் திமுகவின் நிர்வாகிகள் நெல்கொள்முதல் நிலையங்களை கைப்பற்றி,ஒரு மூட்டைக்கு ரூ.60 என கட்டாய வசூலில் ஈடுபடுகின்றார்கள்.
விவசாயிகளின் நிலைமை திமுக அரசால் கவலைக்கிடமாக மாறியுள்ளது. ஏறக்குறைய 20 லட்சம் விவசாயிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு நெல் கொள்முதலுக்கு முழுமையாக நிதி வழங்கியும், மாநில அரசின் மெத்தனத்தால் விவசாயிகளின் பரிதாப நிலை கருதி, தமிழக ஆளுநரை சந்தித்து,முறையிட தமிழக பாஜக விவசாய அணி சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது.
தமிழக அரசின் நெல்கொள்முதல் குளறுபடிகளை பலமுறை சுட்டிக்காட்டியும், அரசு தொடர்ந்து மெத்தனமாக இருப்பதால் அடுத்தகட்டமாக, திருவண்ணமலை மற்றும் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை ஆகிய பகுதி விவசாயிகளை ஒன்று திரட்டி தமிழக பாஜக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, அதில தெரிவித்துள்ளார்.