மின்கட்டணத்தை கண்டித்து, பெரம்பலூர் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!

schedule
2020-07-21 | 07:26h
update
2020-07-21 | 07:40h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

DMK black flag protest in more than 100 places in Perambalur district condemning the state government’s electricity tariff!

தமிழ்நாடு அரசின் மின் கட்டண வசூலைக் கண்டித்து பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில், பெரம்பலூரில் மாவட்ட செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் அவரது வீட்டின் பதாகை ஏந்தி, குடும்பத்தினருடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இதே போன்று, ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை (பெரம்பலூர்), கொளக்காநத்தம் என்.கிருட்டிணமூர்த்தி (ஆலத்தூர். கி), சோமு. மதியழகன் (ஆலத்தூர் .மே), ராஜேந்திரன் (வேப்பூர் .தெ) தி.மதியழகன் (வேப்பூர் வ), வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர்கள் வீடுகளிலும், பேரூர் கிளை பொறுப்பாளர்கள், பல்வேறு அணி செயலாளர்கள் வீடுகளிலும், கருப்புக் கொடி ஏந்தி கண்ட ஆர்ப்பாட்டம், 50 க்கும் மேற்பட்ட பகுதிகளில் நடந்தது.

Advertisement

இது போன்று எசனை தேரடி திடலில், எசனை – கீழக்கரை- பாப்பாங்கரை கிளைகளின் சார்பில், தலைமை செயற்குழு உறுப்பினர் மு.அட்சயகோபால் தலைமையில், ஒன்றிய கவுன்சிலர் எஸ். மலர்கொடிசெல்வராஜ், நா.ஆதித்தியன் ஒன்றிய துணை செயலாளர் ,மு. லட்சுமணன், ஒன்றிய துணை செயலாளர்,கிளை செயலாளர்கள், மணிவாசகம், ஆ. ராஜா, நாராயணசாமி, செல்வம், ப.சுப்ரமணி, ராஜா, கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திமுக முன்னோடிகள், கழக இளைஞரணி அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் மற்றும் குணா (எ) குணசேகரன் உள்ளிட்ட பலர் திரளான கலந்து கொண்டனர்.

எசனையில் திமுகவினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்பாட்டம் நடத்திய போது எடுத்தப்படம்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.07.2026 - 06:13:47
Privacy-Data & cookie usage: