உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய, பெரம்பலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

schedule
2019-11-15 | 06:27h
update
2019-11-15 | 06:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

DMK candidates competing to win local elections, Perambalur District DMK executive meeting resolution Passed!

?

பெரம்பலூர், நவம்பர்-15, பெரம்பலூர் மாவட்ட கழகச் செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் அ. நடராஜன் தலைமையில் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், திமுக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கழக பொதுக்குழுவில் நடைபெற்ற தீர்மானங்களை விளக்கி வருகிற 16.11.19 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஆடுதுறை மு.உத்திராபதி கலந்து கொள்கிறார். இந்த பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது, கழக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினின் கரங்களை வலுப்படுத்தும் வகையில் இளைஞரணிக்கு அதிகளவில் உறுப்பினர்கள் சேர்ப்பது, நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வருகிற 15.11.19 முதல் 20.11.19 வரை மாவட்ட கழக அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளவும், வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்படுகின்ற வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை இந்த செயற்குழு கூட்டம் கேட்டுக்கொள்கிறது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு. அட்சயகோபால், வழக்கறிஞர் என். ராஜேந்திரன் , மாநில நிர்வாகிகள் பா. துரைசாமி, டாக்டர் செ. வல்லபன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், ந.ஜெகதீஸ்வரன், சிவக்குமார், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் செ.இரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் என். கிருஷ்ணமூர்த்தி, எஸ்.அண்ணாதுரை, எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், ஒன்றிய பொறுப்பாளர்கள் வீ.ஜெகதீசன், சோமு.மதியழகன், சி.ராஜேந்திரன், நகரச்செயலாளர் எம். பிரபாகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து. ஹரிபாஸ்கர், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி (எ)அப்துல் பாரூக், பேரூர் கழக செயலாளர்கள் ஆர்.ரவிச்சந்திரன், பி.சேகர், மு.வெங்கடேசன், ஏ.எஸ்.ஜாகீர் உசேன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சு.தங்கராசு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட மாணவரணி அமைப்பாளர், ஆர்.முருகேசன் , மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர்.முத்தரசன் ,மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி (எ)அப்துல் பாரூக், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சன். சம்பத், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவிஜெயபால், மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் ப.செந்தில் நாதன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர். வேணுகோபால், மாவட்ட கலை இலக்கிய பேரவ அமைப்பாளர் கே.எம்.ஏ.சுந்தர்ராஜ், வர்த்தக அணி அமைப்பாளர் மாவட்ட வெ.ரமேஷ் , மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆர்.சரவணன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் க.ரமேஷ் , மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் புஷ்பவள்ளிஇராஜேந்திரன், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் அ.கருணாநிதி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர்
தி.இராசா, மாவட்டஇளைஞரணி துணை அமைப்பாளர்கள் சி.காட்டுராசா, ஏ.எம்.கே. கரிகாலன், அ.ரசூல்அகமது, பெ.அன்பழகன், தங்க கமல், தொ.மு.ச. பேரவை கவுண்சில் மாவட்ட செயலாளர் ஆர். ரெங்கசாமி, மாவட்ட இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் கே.ஜி.மாரிக்கண்னன், முன்னாள் பெருந்தலைவர்கள் க.முத்துக்கன்னு, அழகு.நீலமேகம்,
மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் பி.பன்னீர்செல்வம், தி.ஜான்கென்னடி, ஜி.என்.பி. ஒஜீர், வி.வெங்கடாசலம், ராமகிருஷ்ணன், பிச்சைப்பிள்ளை, அ.மெய்யன்துரை,
கி.கனகராஜ், கு.க.அன்பழகன், க.தர்மராஜ், எம். மணிவாசகம், களரம்பட்டி சதீஷ், பாளை.மணிவண்ணன், எம்.மதியழகன், குலாப், தென்றல் ரவி, ஜி.கே.மூர்த்தி, த.கருணாநிதி, அருண்குமார், ஜி.கே.மூர்த்தி, பி.செல்லசாமி, மாவட்ட பிரதிநிதிகள் அரனாரை ஜெயக்குமார், ரெங்கநாதன்,தலைமை கழக பேச்சாளர் மு.விஜயரத்தினம்,
மகளிர் அணி நிர்வாகிகள் தேன்மொழிதாண்டவன், எஸ்.பாத்திமா பீவி, மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர்கள் ஆர். நட்சத்திரம், ஆ.தமிழரசி, கழக முன்னோடிகள் அமுதாஅன்பழகன். ஆர்.ரமேஷ், பசும்பலூர் ஜெயபால், கல்பாடி ராமச்சந்திரன், குடிக்காடு கணேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வனிதா சுப்ரமணியன்,
நகர இளைஞரணி அமைப்பாளர் அ.அப்துல் கரீம், துனை அமைப்பாளர்கள் த.சின்னத்தம்பி, அ.மாரியப்பன், ந.அறிவழகன், உ.பார்த்திபன், ர.ரமனிசங்கர், நகர மாணவரணி அமைப்பாளர் ரினோபாஸ்டின், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் வ.சுப்ரமணியன், ப. இராஜேஷ், இரா.கணேசன், ரா.சிவக்குமார், மா.பிரபாகரன், ரா. அன்புச்செல்வன், இரா. அருண் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.07.2026 - 21:20:21
Privacy-Data & cookie usage: