மார்ச் 13ல் ரேசன் கடைகள் முன்பு திமுக ஆர்ப்பாட்டம் : பெரம்பலூர் மாவட்ட செயலளார் அறிவிப்பு

schedule
2017-03-08 | 09:04h
update
2026-06-25 | 12:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

DMK demonstration on March 13 before the ration shops: in Perambalur District Secretary announcement

பெரம்பலூர் மாவட்டத்தி்ல் வருகிற மார்ச், 13ம் தேதி ரேசன் கடைகள் முன்பு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாவட்ட செயலளார் குன்னம்.சி. ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் பாமாயில், பருப்பு, புழுங்கல் அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை. பொருட்கள் வாங்க செல்லும் மக்களிடம் எந்த பொருளும் இல்லை என சர்வசாதாரணமாக பதில் சொல்கிறார்கள். எனவே, பினாமி ஆட்சியில் பொது விநியோகத் திட்டம் முற்றிலும் சீரழிக்கப்படுகிறது என்றும், தொடர்ந்து ரேசன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை என்றால் வருகிற 13ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்” என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிவிததுள்ளார்.

Advertisement

அவரது அறிவிப்பிற்கு இணங்க, பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகள் முன்பும் மார்ச் 13ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அந்தந்த பகுதியில் உள்ள கழக நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள் தலைமையிலும், நகரம் மற்றும் மாநகரங்களில் உள்ள வார்டுகளில் அந்தந்த பகுதி வார்டு செயலாளர்கள் தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற வேண்டும்.

இது தொடர்பாக சம்பந்தபட்ட மாநகர, நகர, ஒன்றிய பகுதி, பேரூர்க் கழக செயலாளர்கள், ஆர்ப்பாட்டத்தை முறைபடுத்திடவும், ஆர்ப்பாட்டம் நடைபெறும் விபரங்களையும் மாவட்ட கழகத்திடம் தெரியப்படுத்திட கேட்டுக் கொள்கிறேன்.

பெரம்பலூர் மாநகராட்சி 4வது வார்டு போல்பேட்டையில் உள்ள ரேசன் கடை முன்பு எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இதுபோல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ரேசன் கடைகள் முன்பும் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள கேட்டுக்கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 12:47:31
Privacy-Data & cookie usage: