2வது முறையாக தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று! பெரம்பலூர் வந்த ஆ.ராசா-விற்கு பூக்கள் தூவி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

schedule
2022-10-18 | 18:28h
update
2022-10-18 | 18:29h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

DMK for the 2nd time. Take over as Deputy General Secretary! A. Rasa who came to Perambalur was warmly welcomed by thousands of volunteers who sprinkled flowers

கடந்த 09.10.2022 ஞாயிறன்று, சென்னையில் நடைபெற்ற தி.மு.க.பொதுக்குழுவில், தி.மு.க. தலைவரும் – தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினால், தி.மு.க. துணை பொதுச் செயலாளராக ஆ.ராசா.எம்.பி., யை 2வது முறையாக அறிவித்தார். துணைப் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட ஆ.இராசா. எம்.பி. முதன் முறையாக இன்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார். நீலகிரி மாவட்டத்தில் இருந்து கோயம்புத்தூர்,சேலம், ஆத்தூர் வழியாக பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த ஆ.இராசா.எம்.பி., க்கு , கோனேரிப்பாளையம் 4 வழிச்சாலை சந்திப்பில் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில், மாவட்ட கழக செயலாளரும்- மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான குன்னம் சி. இராஜேந்திரன் மற்றும் எம்.எல்.ஏ பிரபாகரன் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர் திரண்டு சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

அதன் பின்னர், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார், அண்ணல் காந்தியடிகள், அம்பேத்கர் ஆகியோரது சிலைகளுக்கு ஆ.இராசா.எம்.பி.மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கடைவீதி,சங்கு, ரோவர் வளைவு, பாலக்கரை, நான்கு ரோடு வழியாக சென்று அரியலூர் சாலையில் உள்ள பூமணம் திருமண மண்டபத்தில் தி.மு.க. நிர்வாகிகள்,தொண்டர்கள், பொதுமக்கள் என பல ஆயிரம் பேர் அளித்த வரவேற்பையும், பாராட்டையும் ஆ.இராசா.எம்.பி., ஏற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. சொத்தும் பாதுகாப்பு குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், தி.மு.க.கொள்கை பரப்பு துணை செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி, மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, டாக்டர் செ.வல்லபன், வி.எஸ்.பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், என்.ராஜேந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கி.முகுந்தன், ந.ஜெகதீஷ்வரன், எஸ்.அண்ணாதுரை, பட்டுச்செல்வி ராஜேந்திரன், அழகு.நீலமேகம், மாவட்ட துணை செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் செ.இரவிச்சந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, ம.ராஜ்குமார்,
தி.மதியழகன், எஸ்.நல்லதம்பி, வீ.ஜெகதீசன், சோமு.மதியழகன், சி.ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சி.காட்டுராசா, ஏ.எம்.கே.கரிகாலன், தங்க.கமல், டி.ஆர்.சிவசங்கர், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆர்.முருகேசன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் கு.க.அன்பழகன், தண்டபாணி, எம்.மணிவாசகம், சங்கு.கருணாநிதி, மது(எ)மருதமணி, களரம்பட்டி சதீஷ், பேரூர் கழக செயலாளர்கள் ஆர்.ரவிச்சந்திரன்,
எம்.வெங்கடேசன், செல்வலட்சுமி சேகர், ஜாகிர் உசேன், ஒன்றிய பெருந்தலைவர்கள் மீனா அண்ணாதுரை, துணை பெருந்தலைவர் சாந்தாதேவிகுமார், க.ராமலிங்கம், துணை பெருந்தலைவர் எம்.ரெங்கராஜ், தலைமை கழக பேச்சாளர் மு.விஜயரத்தினம், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர். முத்தரசன், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி(எ) அப்துல் பாரூக், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் அ.கருணாநிதி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் புஷ்பவள்ளி ராஜேந்திரன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர்.வேணுகோபால், மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் எம்.சுந்தர்ராஜ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆர்.சரவணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்
ரமேஷ் ராஜேந்திரன், குன்னம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சு.ராஜ்குமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.இராசா, துணை அமைப்பாளர்கள் முனைவர் ஜி.கே.மூர்த்தி, வேல்முருகன், பெரியசாமி,செல்லசாமி, ரவிச்சந்திரன், ரமேஷ், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் க.ரமேஷ், தொ.மு.ச.மாவட்ட கவுன்சில் தலைவர் கே.கே.எம்.குமார், தொ.மு.ச.மாவட்ட கவுன்சில் செயலாளர் ஆர்.ரெங்கசாமி, தொ.மு.ச.கவுன்சில் மாவட்ட பொருளாளர் வேணுகோபால், தொ.மு.ச.பனிமனை பொருளாளர் சு.சங்கர்கணேஷ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பாளை.மணிவண்ணன், மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் அசூர்.ந.முத்துச்செல்வன், நகர இளைஞரணி அமைப்பாளர் அ.அப்துல்கரீம், நகர மாணவரணி அமைப்பாளர் பா.ரினோபாஸ்டின், நகராட்சி உறுப்பினர்கள் ஆர்.சிவக்குமார், சேகர், துரை.கமராஜ், மணிவேல்,சித்ரா, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள் ராஜேஷ், வ.சுப்ரமணியன், ஆர்.அருண், மா.பிரபாகரன்,
கழக முன்னோடிகள் பசும்பலூர் ஜெயபால், இ.பி.கோவிந்தன், குடிக்காடு கணேசன், பொன்.செல்வராஜ், எஸ்.செல்வக்குமார், பழக்கடை ஒஜீர், வனிதா சுப்ரமணியன், எஸ்.அழகுவேல், ஆதித்யன்,லட்சுமணன், இ.பி.கணேசன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 04:44:14
Privacy-Data & cookie usage: