நீட் தேர்வு விலக்குக்கோரி வரும் ஜுலை 27 ஆம் தேதி திமுக மனித சங்கிலி போராட்டம்

schedule
2017-07-25 | 14:54h
update
2026-04-27 | 14:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

DMK human chain protest on July 27th for NEET exempt

பெரம்பலூர்: நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வருகிற 27 ஆம் தேதி திமுக மனித சங்கிலி போராட்டம் அறிவித்து, அதற்கு அனைத்துக்கட்சி ஆதரவு கோரியுள்ளது.

Advertisement

அதையொட்டி, பெரம்பலூர் பாலக்கரை பகுதயில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திமுக மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு என்.செல்லதுரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வீ.ஞானசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சி.தமிழ்மாணிக்கம், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வழக்கறிஞர் தமிழ்செல்வன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி, கட்டுமான தொழிலாளர்கள் கழகம், திராவிடர் கழகம் உள்பட பல்வேறு தோழமை கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். மனித சங்கிலி வெற்றி பெற வைக்க அனைத்துகட்சியினரும் திரளாக பங்கேற்க செய்வதென தீர்மானிக்கப்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.04.2026 - 14:46:53
Privacy-Data & cookie usage: