DMK Perambalur district in-charge appointment of V. Jagatheesan!
பெரம்பலூர் மாவட்ட செயலாளராக இருந்து குன்னம் சி.ராஜேந்திரன் உடல் நிலை சரியில்லாததால், தனது திமுக மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விலகி கொண்டார். திமுக தலைமை பொதுச்செயலாளர் துரைமுருகன், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளராக இருந்த வீ.ஜெகதீசனை தி.மு.க.பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்துள்ளார். அக்கட்சியினர், பொறுப்பாளர்கள் தொடர்ந்து அவருக்கு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொண்டார்.