டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெரம்பலூரில், தி. மு. க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

schedule
2020-12-05 | 10:30h
update
2020-12-05 | 10:30h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

DMK protests in Perambalur in support of struggling farmers in Delhi!

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை அருகில், மாவட்ட தி.மு.க.சார்பில் டெல்லியில் வேளாண் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவவாயிகளுக்கு ஆதரவாக அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விவசாயிகளின் உணர்வுக் கொந்தளிப்பான வாழ்வுரிமை போராட்டத்திற்கு உரிய மதிப்பளித்து, 3 வேளாண் சட்டங்களையும் உடணடியாக மத்திய பா.ஜ.க.அரசு திரும்ப பெற வலியுறுத்தியும், விவசாயிகளின் ஜீவாதார உரிமைகளைப் போற்றவும், இந்திய வேளாண்மைத்துறை வீழ்ந்து விடாமல் காப்பாற்றவும், தலைநகர் டெல்லியில் தொடர்ந்து தொய்வின்றி நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு உணர்வு பூர்வமான ஆதரவு தெரிவித்தும், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில் மாவட்ட செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில நிர்வாகிகள் பா. துரைசாமி, டாக்டர் செ.வல்லபன், வி.எஸ்.பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், பட்டுச்செல்வி ராஜேந்திரன், சிவக்குமார், மாவட்ட அவைத் தலைவர் அ. நடராஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் நூருல்ஹிதா இஸ்மாயில், தழுதாழை பாஸ்கர், மாவட்ட பொருளாளர் செ. இரவிச்சந்திரன்,
ஒன்றிய செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.அண்ணாதுரை, தி.மதியழகன், எஸ்.நல்லதம்பி, ஒன்றிய பொறுப்பாளர்கள் வீ. ஜெகதீசன், சோமு.மதியழகன், சி.ராஜேந்திரன், நகர கழகச் செயலாளர் எம். பிரபாகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து. ஹரிபாஸ்கர் , மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சு. தங்கராசு, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 20:18:35
Privacy-Data & cookie usage: