பெரம்பலூர் அருகே திமுக மூத்த தொண்டர் சிங்காரம் கொரோனாவிற்கு பலி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல்!!

schedule
2021-06-05 | 18:31h
update
2021-06-05 | 18:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

DMK senior volunteer Singaram killed by Corona near Perambalur Chief Minister MK Stalin’s condolences !!

பெரம்பலூர் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவரும்- மாவட்ட கழகச் செயலாளருமான குன்னம் சி.இராஜேந்திரனின் தந்தையும் திமுகவின் மூத்த தொண்டருமான சிங்காரம். (வயது 92) என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த மே-2ம் தேதி இறந்தார். குன்னத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவரது நல்லடக்கம் குன்னத்தில் நடைபெற்றது. திமுக முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். மறைந்த சிங்காரம் என்பவருக்கு குன்னம் சி.இராஜேந்திரன். சி.ஜெயச்சந்திரன். சி.கண்ணதாசன். சி.ஆசைத்தம்பி. ஆகிய நான்கு மகன்கள் உள்ளனர். மறைந்த சிங்காரம் மனைவி அமராவதி என்பவர் ஏற்கனவே இறந்து விட்டார். மாவட்ட திமுகச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கலுடன் ஆறுதல் தெரிவித்தார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆ. இராசா. எம். பி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர், பெரம்பலூர் எம்.எல்.ஏ ம.பிரபாகரன் ஆகியோர் தொலைபேசியில் அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.04.2026 - 23:37:26
Privacy-Data & cookie usage: