DMK works best in Opposition Party : TMC Chief GK Vasan

பெரம்பலூரில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று கலநது கொள்ள வந்த அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:

GK-vasan-perambalur-ariyalur-excutive-meetingஉள்ளாட்சித் தேர்தலில் தமாகா வலுவாகச் செயல்படவே மாநில, மண்டல அளவில் 12 ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.

தலைவர் ஜி.கே. மூப்பனாரின் பிறந்த நாளை விவசாயிகள் தினப் பொதுக்கூட்டமாக ஆக. 19 அன்று திருவாரூரில் நடத்தவுள்ளோம். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமாகா மாணவரணி சார்பில் ஆக. 11 ஆம் தேதி சென்னையில் கலந்துரையாடல் நடத்தவுள்ளோம்.

வேப்பந்தட்டையில் தீயணைப்பு நிலையம், பெரம்பலூரில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். அரசு சார்பில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும், விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். சின்ன வெங்காயத்துக்கு மாநில அரசே விலை நிர்ணயிக்க வேண்டும். ஆலத்தூர் வட்டம், கொட்டரையில் நீர்தேக்கம் அமைக்கக் கையகப்படுத்திய விவசாய நிலத்துக்கான தொகையை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும்.

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை சிறுவாச்சூரிலும், பாடாலூர்- ஊட்டத்தூர் பிரிவுச் சாலையிலும் நிகழும் தொடர் விபத்துகளைத் தடுக்க உயர்நிலை மேம்பாலமும், அரியலூர் ரயில்வே பாதைப் பகுதியில் மேம்பாலமும் அமைக்க வேண்டும். தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், ஆத்தூர், சேலம், நாமக்கல்லை இணைக்கும் வகையில் ரயில் போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டும். அதிக அளவில் பெரம்பலூரில் விளையும் மக்காச் சோளத்திற்கு உரிய விலை கிடைக்க செய்வதோடு, அதனை மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துவமாகச் செயல்படுவோம். இருப்பினும், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகே கூட்டணி குறித்து முடிவாகும். தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் ஜனநாயக முறைப்படி பேச வாய்ப்பளிக்க வேண்டும் தமிழக பிரச்னைக்காக நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம், தமிழக சட்ட சபையில், திமுக எதிர்க்கட்சி பணியினை சிறப்பாக செய்ர் வருகிறது என ஜி.கே.வாசன் தெரவித்தார். மாவட்டத் தலைவர் ஜனார்த்தனன் தலைமையில் பெரம்பலூர் – அரியலூர் த.மா.கா நிர்வாகிகள்ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், ஆலத்தூர் வட்டாரத் தலைவர் சித்தார்த்தன் வரவேற்றார். அரியலூர் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.எம்.குமார், முன்னாள் சேர்மன் பெரியசாமி, மாநில கொள்கை பரப்பு செயலாளர் காரை.ஆர்.சுப்பிரமணியன், நாட்டார்மங்கலம், என்.ஜெயராமன், உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டர்.

முன்னாதாக பெரம்பலூருக்கு வருகை தந்த தலைவர் ஜி.கே. வாசனுக்கு அக்கட்சி நிர்வாகிள் பெரம்பலூர் நான்கு ரோடு சந்திப்பில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!