திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் நேர்காணல்; அரியலூர்

பெரம்பலூர் மாவட்ட செயலாளர்கள் கூட்டறிக்கை!

schedule
2023-10-13 | 17:16h
update
2023-10-13 | 17:16h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

DMK youth Wing organizers interview; Ariyalur – Perambalur District Secretaries Joint Statement!

அரியலூர் மாவட்ட செயலாளரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான சா.சி.சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் ஆகிய இருவரும் விடுத்துள்ள கூட்டறிக்கை:

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள, பெரம்பலூர் நகரம், பெரம்பலூர், ஆலத்தூர் கிழக்கு, ஆலத்தூர் மேற்கு, வேப்பந்தட்டை கிழக்கு, வேப்பந்தட்டை மேற்கு, வேப்பூர் வடக்கு, வேப்பூர் தெற்கு ஆகிய ஒன்றியங்கள், குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிக்காடு ஆகிய பேரூர்களுக்கும்,

Advertisement

அரியலூர் மாவட்டத்தில் உள்ள, அரியலூர் வடக்கு- தெற்கு ஜெயங்கொண்டம் வடக்கு- தெற்கு, திருமானூர் கிழக்கு- மேற்கு,ஆண்டிமடம் வடக்கு- தெற்கு, செந்துறை வடக்கு- தெற்கு, தா.பழூர் கிழக்கு- மேற்கு ஆகிய ஒன்றியங்கள், அரியலூர் நகரம், ஜெயங்கொண்டம் நகரம், உடையார்பாளையம் பேரூராட்சி, வரதராஜன்பேட்டை பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளது.
இதற்கான நேர்காணல் வருகிற 17.10.2023,(செவ்வாய்க்கிழமை), மதியம் 2.00 மணிக்கு , பெரம்பலூர் மாவட்டத்திற்கும், மாலை 4.00 மணிக்கு அரியலூர் மாவட்டத்திற்கும் பாலக்கரையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறுகிறது.

இதில் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் பி.எஸ்.சீனிவாசன், எஸ்.ஜோயல், இன்பா,ஏ.என்.ரகு, நா.இளையராஜா, ப.அப்துல்மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, ஜி.பிரதீப்ராஜா, சி.ஆனந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு நேர்காணல் நடத்துகின்றனர்.

எனவே, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் விண்ணப்பித்த அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.08.2026 - 12:16:47
Privacy-Data & cookie usage: