இரட்டை இலை தீர்ப்பு

பெரம்பலூர் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

schedule
2017-11-23 | 00:01h
update
2017-11-24 | 07:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Double leaf verdict – the celebration at Perambalur AIADMK

இரட்டை இலை சின்னம் எடப்பாடி அணிக்கு கிடைத்ததை முன்னிட்டு பெரம்பலூரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Advertisement

அதிமுகவில் இணைந்து ஒன்றுபட்ட அணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் வழங்கியது முன்னிட்டு குன்னம் சட்டமன்ற உறுப்பினரும், பெரம்பலூர் மாவட்ட செயலாளருமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். பின்னர், ஊர்வலமாக சென்ற அதிமுகவினர், காமராஜர் வளைவு, மதனகோபலபுரம், புதிய பேருந்து நிலையம் பகுதிகளிலும் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

அப்போது பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் மருதைராஜா, ஒன்றிய செயலாளர்கள் கர்ணன் (ஆலத்தூர்), சிவப்பிரகாசம், (வேப்பந்தட்டை) உள்ளிட்ட பல்வேறு அணியை சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் அணியினர் உள்பட ஏராளமான தொண்டர்கள் இருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 08:35:09
Privacy-Data & cookie usage: