குன்னம் அருகே இரட்டை கொலை வழக்கு: குற்றவாளிகளிடம் கைப்பற்றிய பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்!

schedule
2021-08-05 | 14:40h
update
2021-08-05 | 14:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Double murder case near Kunnam: Police hand over seized items to culprits!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அல்லிநகரம் கிராமத்தில் வசித்து வந்த, பெரியசாமி (62), மற்றும் அவரது மனைவி அறிவழகி (48), ஆகியோர் கடந்த 08.06.2021 அன்று அதிகாலை சுமார் 2.30 மணிஅளவில், கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தனர்.

Advertisement

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், 2 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில், கலியமூர்த்தி மகன் சந்துரு @ சந்தோஷ்குமார், ஜோதி மகன் மகேஷ், தர்மலிங்கம் மகன் யுவராஜ், ராமலிங்கம் மகன் அப்பு @ ஸ்ரீராமக்கிருஷ்ணன், மணி மகன் சத்யா, மருதமுத்து மகன் நாட்டாத்தி @ மணிகண்டன் ஆகியோர் திட்டம் தீட்டி, கொடூர ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து விட்டு, வீட்டில் இருந்த தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. பின்னர், அவர்களை கைது செய்த போலீசார்

குற்றவாளிகளிடம் இருந்து, 16 பவுன் தங்க நகைகள், ஒரு டிவி , வெள்ளி கொலுசு ஒரு ஜோடி, ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூபாய் 2,62,000/- மதிப்புள்ள பொருட்களை பாதிக்கப்பட்ட நபரான சத்தியாவிடம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில், போலீஸ் மணி ஒப்படைத்தார்.

வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை, எஸ்.பி, மணி வெகுவாக பாராட்டினார்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 11:47:31
Privacy-Data & cookie usage: