பெரம்பலூர் அருகே இரட்டை கொலை! பெற்றோரை கொலை செய்து சாக்குப்பையில் கட்டிய மகன்! 

schedule
2020-04-30 | 06:51h
update
2020-04-30 | 06:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Double murder near Perambalur Son who murdered his parents

பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் 5வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 63), செல்லம்மாள் (வயது 58), விவசாய வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ரமேஷ் (வயது 27) என்ற மகன் உள்ளார். அவருக்கு திருணமாகி 2 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ள நிலையில், மனநிலை பாதிக்கப்பட்ட ரமேஷ் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.

மேலும், கிணற்றில் தவறி விழுந்ததில் ஒரு காலிலும் முறிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரமேசின் மனைவி தங்கமணி இன்று காலையில் எழுந்து பார்த்த போது வெகுநேரமாகியும், மாமியார் மாமனார் இருவரும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்து வீட்டின் கதவை திறந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் சாக்கு மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது. இத்தகவல் லாடபுரம் உள்ளிட்ட அக்கம்பக்கம் கிராமங்களுக்குள் தீயாக பரவியது. சம்பவம் அறிந்த மக்கள் மற்றும் உறவினர்கள் திரண்டு வந்து பார்த்த போது கொலைசெய்த ரமேஷ் மொட்டைமாடியில் நின்று கொண்டு தன்னைத்தானே வெட்டிக் கொள்வதாக மிரட்டல் விடுத்தார். இது குறித்த தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் மனநிலை பாதிக்கப்பட்டதால் ரமேஷின் மனைவி தங்கமணி ஒதுங்கி வந்த நிலையில் விரக்தியானதும், அதனால், பெற்றோரை கொலை செய்ததும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும், குழந்தைகளின் நிலையும் எண்ணி வேதனை அடைந்து பரிதாபபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2026 - 18:28:49
Privacy-Data & cookie usage: