பெரம்பலூர் மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியல்: அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் வெளியிட்டார்.

schedule
2020-11-16 | 07:34h
update
2020-11-16 | 07:34h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Draft Voter List of Perambalur District: Published by the Collector in the presence of political parties.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெங்கட பிரியா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் அலுவலகத்தில் வெளியிட்ட அவர் தெரிவித்ததாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் 14.02.2020 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 2,94,466 வாக்காளர்களும், 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2,66,224 வாக்காளர்களும் ஆக மொத்தம் 5,60,690 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். அதன் பின்னர் நடைபெற்ற தொடர் திருத்த பணியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களின் பெயரில் 147.பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 340 ஆண் வாக்காளர்களும் 379 பெண் வாக்காளர்களும் மற்றும் 148.குன்னம் சட்டமன்ற தொகுதியில் 379 ஆண் வாக்காளர்களும் 416 பெண் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இறப்பு, இரட்டை பதிவு மற்றும் இடப்பெயற்சி காரணமாக 147. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 1,478 ஆண் வாக்காளர்களும், 1,294 பெண் வாக்காளர்களும், 1 இதர வாக்காளரும், மற்றும் 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் 1,706 ஆண் வாக்காளர்களும், 1392 பெண் வாக்காளர்களும் 1 இதர வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது வெளியிடப்படுகின்ற வரைவு வாக்காளர் பட்டியலின் படி 147.பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் தற்போது 332 வாக்குசாவடிகளும், 148.குன்னம் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குசாவடிகளும், மொத்தமாக 652 வாக்குசாவடிகள் உள்ளன.

Advertisement

147.பெரம்பலூர; சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்கு சாவடிகளில் 1,42,680 ஆண்கள் வாக்காளர்களும், 1,49,710 பெண்கள் வாக்காளர்களும், 22 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,92,412 வாக்காளர்கள் உள்ளனர். 148.குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 320 வாக்கு 1,30,788 ஆண் வாக்காளர்களும், 1,33,119 பெண்; வாக்காளர்களும், 13 இதர வாக்காளர்களும் என மொத்தம 2,63,920 வாக்காளர்கள் உள்ளனர். ஆக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் 2,73,468 ஆண் வாக்காளர்களும், 2,82,829 பெண் வாக்காளர்களும், 35 இதர வாக்காளர்களும் என மொத்தம் 5,56,332 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 01.01.2021 அன்று 18 வயது பூர்த்தியடையும் அனைத்து தகுதியுள்ள நபர்களும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் மற்றும் பெயர் நீக்கல் போன்றவற்றிற்கான விண்ணப்பங்களை சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார;கள்.

வருகின்ற 21.11.2020 (சனி கிழமை), 22.11.2020 (ஞாயிறுக் கிழமை) 12.12.2020(சனிக்கிழமை), 13.12.2020 (ஞாயிறுக் கிழமை) ஆகிய நாட்களில் சம்பந்தப்பட்ட வாக்கு சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் எனவும், தங்கள் கட்சியனரால் நாளது வரையில் வாக்குசாவடி நிலை முகவர்கள் நியமிக்கப்படாத வாக்குச் சாவடிகள் ஏதேனுமிருப்பின் அவற்றிற்கு உடனே வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமிக்குமாறு சம்மந்தப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், பெரம்பலூர் வருவாய்கோட்ட சார் ஆட்சியர் பத்மஜா , நகராட்சி ஆணையர் குமரிமன்னன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் துரைராஜ், அனைத்து வட்டாட்சியர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் திமுகவழக்கறிஞர் அணி செந்தில்நாதன், பெரம்பலூர் அதிமுக நகர செயலாளர் ஆர்.ராஜபூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.08.2026 - 00:20:48
Privacy-Data & cookie usage: