Drifts of child rearing

Childl care

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலை சொல் கேளாதவர் – குறள்

மாற்றம் இவ்வுலகின் என்றுமே மாறாத தாரக மந்திரம் இந்தமாற்றம் கால்த்திற்கேற்றார்போல் என்றும் மாறக்கூடியது.குழந்தை வளர்ப்பிலும் மாற்றம் தனது பாதம் பதிக்க தவறவில்லை.

சில உதாரணங்களோடும் ஒப்பிடுதலோடும் அதற்குண்டான தீர்வுகளை நான் ஆராய்ந்து தெரிந்தவரை தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இக்கட்டுரை.

இது தொடர்பாக தங்களுக்கு உடன்பாடுகள் கருத்து வேறுபாடுகள் அல்லது கருத்து பரிமாற்றங்கள் வழிகாட்டுதல்கள் போன்றவைகளை விவாதிக்க வேண்டுமெனில் jayachandrashekar2811@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தாராளமாக தங்களின் கருத்துகளை அனுப்பி வைக்கவும் நானும் எப்பொழுதும் கருத்து பரிமாற்றத்துக்கு தயாராக இருக்கிறேன்.

இன்றைய இயந்திர வாழ்க்கையில் குழந்தைகளை வளர்த்தெடுப்பது என்பது மிகப்பெரிய சுமையாக மாறிவிட்டது.ஒரு சுமையான காலத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

அது என்ன குழந்தை வளர்ப்பு ஒரு சுமை என கூறுகிறீர்கள் என கோபம் கொள்ளும் தாய்மார்களுக்கும் குழந்தை வளர்ப்பை சுமை என நினைக்கும் சகோதரிகளுக்கும் சில ஒப்பிடுதல்களோடு இக்கட்டுரையை எழுத விழைகின்றேன்.

ஒப்பிடுதல்

அக்கால குழந்தை வளர்ப்பில் அப்படி என்னென்னதான செய்தார்கள் ரத்தின சுருக்கதுதோடு சில காரண காரியங்களை அடிக்கொடிடுகிறேன். இங்கு அன்றோ ஒரு குழந்தை வளர்ப்பில் அக்குடும்பம் முதல் சமுதாயம் வரை அனைவரும் பொறுப்பெடுத்துக்கொண்டனர்.

இன்றோ குழந்தை வளர்ப்பில் ஆயா மற்றும் ஆசானின் பங்கே அதிகம் காணப்படுகிறது. வாழ்வை மேம்படுத்த இயந்திரங்களின் கண்டுபிடிப்பு இப்பொழுது நம் வாழ்வின் இயந்திரத்தனமாக மாற்றியது எப்படி என்பது பற்றி ஒரு சிறிய பார்வை

அக்கால குழந்தை வளர்ப்பு ஒரு ஆய்வு .

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கூடுமானவரை அனைத்து குடுபங்களும் கூட்டு குடும்பங்கஃளாகவே இருந்தன.தாத்தா, பாட்டி, பெரியப்பா , பெரியம்மா,சித்தப்பா, சித்தி அத்தை மாமா ,அம்மா, அப்பா சகோதர சகோதரிகள் என்று எல்லோரும் உறவு முறைகளோடு வளர்ந்தோம்.

உறவுகளின் அன்பும் பாசமும் கண்டிப்பும் நம்மை நேர்படுத்தியது.வீட்டில் அனவரும் அவரவர்களால் இயன்ற வலைகளை பங்கிட்டு செய்து கொண்டனர்.

குழந்தைக்ள் உள்பட குழந்தைகளுக்கு தெரியாமலேயே அவர்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டனர் சிறு வயதிலேயே புரிதல் உழைத்தல் .ஈட்டுதல் , குடும்பத்தின் சூழ்நிலை அறிதல் என எல்லாதே கற்று கொடுக்கப்பட்டது.

இதில் முக்கியமானது நம்மை சார்ந்தவருக்கு விட்டு கொடுப்பது, முக்கியமான முடிவுகள் கலந்துரையாடல் எல்லாம் குழந்தைகள் எதிரில் விவாதிக்கப்பட்டது.

இது குழந்தைகளுக்கு குடும்பத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் அறிய ஒரு வாய்ப்பாக அமைந்தது முடிவெடுத்தல் என்ற முக்கியமான தன்மை சிறுவயதில் இருந்தே ஊட்டப்பட்டது. முக்கியமானதொரு முடிவு எடுக்கும் முன் யோசிக்கவும் பின் விளைவுகளை தானாகவே சிந்திக்கவும தானாகவே எந்த சிரமும் இன்றி வளர்ந்து வந்தது.

தன் முடிவில் தவறு ஏற்பட்டு இருந்தால் அதனைதிருத்தி கொள்ள முடியா விட்டாலும் அதன் விளைவுகளை ஏற்றுக்கொண்டு அனுசரித்து தன்னம்பிக்கையுடன் முன்னே செல்ல எண்ணங்கள் மனதிற்க்குள் ஆழமாக விதைக்கப்பட்டன.

விசேச நாட்களில் குடும்பங்கள் சொந்த பந்தங்கள் ஒன்று கூடினார்கள் எல்லோர் வீட்டில் உள்ள பிரச்சினைகள் நடப்புகள் எல்லாம் விவாதிக்கப்பட்டன.

சபை நாகரிகம் பெரியோரை மதித்தல் கருத்துரிமை கீழ்படிதல் குழ்விவாதங்கள் என அனைத்தும் சிரமிமில்லாமல் தாமாகவே குழந்தைகள் பாரத்து பார்த்து பழகி கொண்டனர் உறவுகள் எங்கு சிறு தவறு தென்பட்டாலும் தவறு செய்யும் குழந்தைகளை தண்டிக்கும் உரிமையும் பெரியவர்கள் தாமாக பொறுப்பு எடுத்து கொண்டனர்.

பெண் குழந்தைகள் தாமாக பட்டுடுத்தி, பூச்சூடி, ஆபரணங்கள் அணிந்து நடமாடியபோது,உறவுகள் அனைத்தும் ஆசைதீர அணைத்து உச்சந்தலையில் முத்தமிட்டு விரசிமில்லாமல் ரசித்து பாதுகாத்தனர்.குழந்தைகள் வளர்ப்பில் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டு சீராக வளர்க்கப்பட்டனர்.

இன்றைய குழந்தை வளர்ப்பு ஒரு பார்வை ..

கால்த்தின் கட்டாயம் கூட்டு குடும்பங்கள் கரைந்தே போயின.கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்லும் நிர்ப்பந்த்ம. சில்ர ஆடம்பரத்திற்காகவும் சிலர அவசியத்திற்காகவும் செல்கின்றனர். பெற்றோரின் சம்மதம் இல்லாமல் நடைபெறும் காதல் திருமணங்கள் .அதனால் பெற்றவர்களுக்கும் பெற்ற பிள்ளைகளுக்கும் ஏற்படும் மனக்கசப்பு.

பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்று இருந்தாலும் பெற்றோரை உடன் வைத்து கொள்ளாமல் சுமையாக கருதும் பிள்ளைகள். இந்த அலட்சியத்தால் சொந்தங்கள் இல்லாத தீவுகளாக வாழுகின்றனர்.இந்த நிலையில் குழந்தை பெற்றுக்கொண்டால் வளர்க்க முடியாமல் திண்டாடும் நிலை ஏற்படுகிறது.

தம்மை சார்ந்தவர்க்ள இல்லாமல் பிற மனிதர்களை ந்ம்ப வேண்டிய அவலநிலை. இந்நிலையில் குழந்தைகள் தனிமைபடுகின்றனர்.இது சரி இது தவறு என அறிவுரை கூற யாருமில்லாமல் தான்தோன்றித்தனமாக குழந்தைகள் வளருகின்றன.

இதில் முக்கியமாக நாம் யோசிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது.அதுதான் தொழில் நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி.இந்த தொழில்நுடப் வளர்ச்சி நம் சமுதாயத்தை மேன்மை படுத்தியுள்ளது. என்ற உண்மை ஒருபிறம் இருந்தாலும் இந்த வளர்ச்சியும் உபயோகமும் நம் குழந்தைகளையும் சமுதாயத்தையும் ஒரு புறம் சீரழித்து கொண்டுதான் இருக்கிறது என்பது மறுக்க முடியாத வேதனைக்குரிய உண்மை, எந்த கோணத்தில் எடுத்து கொண்டாலும் இன்றைய இளைய சமுதாயம் மிகவும் ஆபத்தான வழி நடத்துதலில் உள்ளது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

இதில் மனதால் பாதிக்கப்படுபவர்கள் ஆண் குழந்தைகள் என்றாலும் மனதாலும், உடலாலும் மிகவும் பாதிக்கப்படுவது பெண் குழந்தைகளே.

எங்கே சென்று கொண்டு இருக்கிறோம் தேடிக்கொண்டு இருக்கிறோம் எதை இழந்து கொண்டு இருக்கிறோம் என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமலே ஓடிக்கொண்டு இருக்கிறோம் என்ற அவல நிலையில் இருந்து மீள்வது எப்படி எப்போது என்பதும் தெரியாமல் இருக்கும் பரிதாபம்தான் இந்த தலைமுறை வாழ்க்கை.

குழந்தை வளர்ப்பு ஒரு கலை குழந்தை வளர்ப்பினை புரிந்து குழந்தைகளை கொண்டாடி அவர்களை புரிந்து நல் குழந்தையாக வளர்த்து வருங்காலத்தில் பொறுப்பானவர்களாக வருங்கால தூண்களாக மாற்ற முற்படுவதுதான் நமது ஒருமித்த கருத்தாக இருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான முடிவாகும்.

இவண் ஜெஜெ .. பத்திரிகையாளர், எழுத்தாளர்


Copyright 2015 - © 2021 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!