ஓடும் கிரசரில் சிக்கி டிரைவர் பலி! பெரம்பலூர் அருகே பரிதாபம்!!

schedule
2022-04-12 | 08:49h
update
2022-04-12 | 08:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Driver killed after getting stuck in running stone breaking crusher! Awful near Perambalur !!

பெரம்பலூர் மாவட்டம் எசனை காட்டு மாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள இரட்டை மலைசந்தில், திருச்சி உறையூர் நாரயணன் நகரைச் சேர்ந்த பெருமாள் மகன் செல்வக்குமார் மற்றும் பெரம்பலூர் மேட்டுத் தெருவை சேர்ந்த காளிகவுண்டர் என்பவர்களக்கு சொந்தமான (ஜெயலட்சுமி) கிரசர் கடந்த சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகிறது அதில் மேனேஜராக திருச்சி வாழவந்தான் கோட்டையை சேர்ந்த சரவணன் (45) தங்கி வேலை பார்த்து வருகிறார்.

கிரஷரில் இயங்கும் பெல்டின் ஆப்ரேட்டர்களாக எசனையை சேர்ந்த சுப்பன் மகன் பாலு (50), எசனை – கீழக்கரையை சேர்ந்த முத்து மகன் நல்லுசாமி (45) என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களோடு, எசனை சிவன் கோயிலை சேர்ந்த ராமசாமி மகன் தமிழரசன் (52)கடந்த 20 வருடங்களாக லாரி டிரைவராக இருக்கிறார். தமிழரசனுக்கு ஆராயி (50) என்ற மனைவியும், ரமேஷ் (35) என்ற மகனும், ரம்யா (33) என்ற மகளும் இருந்து வருகிறார்கள்.

Advertisement

இந்நிலையில் இன்று காலை 10.00 மணிக்கு லாரியில் லோடு ஏற்றுவதற்காக கிரஷரில் வந்து லாரியை நிறுத்திவிட்டு தமிழரசன் என்பவர் கிரஷரில் ஓடும் பெல்டில் ரோலர்களுக்கு இடையே உள்ள கல் மற்றும் மண்ணை அப்புறப்படுத்துவதற்காக ஓடிக் கொண்டிருக்கும் பெல்டில் தனது கையால் அப்புறப்படுத்தி உள்ளார். அப்போது பெல்ட்டில் கை மாட்டிக் கொண்டு உள்ளே இழுத்து அவரது தலையானது ரோலரில் ஒரு சுற்று சுற்றி அடித்தது. அதில் தமிழரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, தமிழரசன் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் உரிமையாளர்கள் மற்றும் மேனஜர் மற்றும் உடன் பணிபுரிந்த தொழிலார்களிடம் தீவர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக கல் உடைக்கும் தொழில் காலம் காலமாக நடந்து வருகிறது. இங்குள்ள குவாரிகளில் உரிய பாதுகாப்புகள் இல்லாமல் இயக்கப்ட்டு வருவதோடு, அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு, உரிய ஊதியம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட இழப்பீடுகள் எதுவும் வழங்குவதில்லை.

இதே போன்று , ஆபத்தான கல் உடைக்கும் தொழிலாளர்கள் விபத்துகளில் சிக்குவதும், பின்னர் அவர்களின் குடும்பத்தினர் வாழ்வாதரத்திற்காக அல்லாடுவதும் வாடிக்கையாகி வருகிறது. இது குறித்து எந்தவித துறை அதிகாரிகளும் மாமூலாக கண்டு கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 12:35:43
Privacy-Data & cookie usage: