பெரம்பலூர் அருகே விபத்து குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்தவர் சாவு

schedule
2017-05-29 | 15:26h
update
2026-05-02 | 09:50h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

drunken driving was the accident death near by perambalur

பெரம்பலூர் துறைமங்கலம் அருகே உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று சுமார் பதினோரு மணியளவில் வாலிபர் ஒருவர் சாலையில் இறந்து கிடப்பதாக வந்த தகவலின் பெரம்பலூர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி, இறந்தவர் யார் என விசாரணை நடத்தினர்.

Advertisement

விசாரணையில், கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள கோழியூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 30), ஹோட்டல் தொழிலாளி எனபதும், இவருக்கும் இவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் என்றும், இந்நிலையில் இன்று காலை தனது உறவினரான கிருஷ்ணசாமி என்பவருடன் மது அருந்தி உள்ளார் என்றும் தெரிய வந்தது. மேலும், போதை அதிகமானதால் கிருஷ்ணசாமி அப்பகுதியிலேயே படுத்து கிடந்து உள்ளார்.

போதை தலைக்கேறிய செல்லத்துரை மட்டும் வழித்தவறி இரு சக்கர வாகனத்தில் பெரம்பலூர் பகுதிக்கு வந்திருப்பது தெரியவந்து. துறைமங்கலம் 3 ரோடு மேம்பாலம் அருகே வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் சாலையின் மீது மோதி இறந்து விட்டாரா அல்லது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து விட்டரா என்ற கோணத்திலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூறு ஆய்வுக்காக கைப்பற்றிய செல்லத்துரையின் உடலை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.05.2026 - 09:51:00
Privacy-Data & cookie usage: