DSP started work on planting trees near Perambalur.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியம், பேரளி ஊராட்சிக்குட்பட்ட மருவத்தூர் கிராமத்திலுள்ள காவல்நிலைய வளாகத்திற்குள் மரக்கன்றுகள் நடும் பணி இன்று நடைபெற்றது.
இப்பணியினை பெரம்பலூர் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் கென்னடி துவக்கி வைத்தார்.
முதற்கட்டமாக காவல் நிலையம் மற்றும் காவல் நிலைய வளாகத்தை சுற்றியுள்ள பகுதியில் 100 கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இன்று புங்கன் மர கன்றுகளை நடவு செய்து இப்பணிகளை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் கலா, மருவத்தூர் எஸ்ஐ சிலம்பரசன் மற்றும் காவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.