குடும்பத் தகராறு காரணமாக பெரம்பலூர் அருகே கணவர் தூக்கிட்டு தற்கொலை!

schedule
2020-02-12 | 17:20h
update
2020-02-12 | 17:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Due to family dispute hangs near the husband! near in Perambalur

பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தை நடராஜ் மகன் முனிவேல் (வயது 45). இவர், கேரளாவில் ஓட்டுனராக வேலை பார்த்து வருவதாகவும் கோயம்புத்தூரில் மரியா என்ற பெண்ணை திருமணம் செய்தார் அதில் திவ்யா (வயது 13) என்கிற ஒரு மகள் இருப்பதாகவும், முனிவேலுவிற்கும் மரியாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு பிரிந்து வாழ்ந்து வந்தார். அதன் பின்பு கேரளாவில் வேலை செய்து வந்த முனிவேல் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வேலூர் கிராமத்தை சேர்ந்த கந்தசாமி மகள் சுரேகா (வயது 34) என்வரை திருமணம் செய்து கொண்டார். இதில், இவர்களுக்கு ஆறு மாதத்தில் ரித்விகா என்கிற ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

Advertisement

இதில் முனிவேல் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்த காரணத்தினால் சுரேகாவிற்கும் முனிவேலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சுரேகா கோபித்துக்கொண்டு புதூரில் வசிக்கும் அவரது சகோதரி தனலட்சுமி வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த முனிவேல் இன்று மதியம் அவரது வீட்டில் தூக்கு போட்டு இறந்து விட்டதாக முனிவேல் தாய் தனபாக்கியம் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்அண்ணாதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.07.2026 - 20:53:01
Privacy-Data & cookie usage: