பெரம்பலூர் மாவட்ட இ-சேவை மையங்கள் மூலமாக 3,96,083 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன

schedule
2017-02-18 | 15:02h
update
2026-06-26 | 22:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur 3,96,083 certificates have been issued by the district e-service centers

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட மின் ஆளுமை சங்கம் மூலமாக மொத்தம் 185 அரசு இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் கிராம ஊராட்சிகளில் 54 மையங்கள் வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள் மூலமாகவும், 126 மையங்கள் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலமாகவும் செயல்பட்டு வருகின்றன, இதுதவிர 4 மையங்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாக வட்டாச்சியர் அலுவலகங்களிலும், 1 மையம் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் சேவைகள் வழங்கி வருகின்றன.

Advertisement

இச்சேவை மையங்கள் மூலமாக வருவாய்த்துறையின் சான்றிதழ்கள், சமூக நலத்துறையின் திருமண நிதி உதவி திட்டம், இணைய வழி பட்டா மாறுதல், முதல் தலைமுறை பட்டதாரிக்கான சான்றிதழ்கள், கலப்புத் திருமண சான்றிதழ்கள், சொத்து மதிப்பு சான்றிதழ்கள், இரண்டு பெண் குழந்தைகளுக்கான சான்றிதழ்கள் போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து இ-சேவை மையங்கள் மூலமாக 1,04,878 சாதிசான்றிதழ்களும், 1,65,541 வருமானசான்றிதழ்களும், 1,15,792 இருப்பிட சான்றிதழ்களும், 9,872 முதல் தலைமுறை பட்டதாரிக்கான சான்றிதழ்களும் என மொத்தம் 3,96,083 சான்றிதழ்களும், 4,903 பட்டா மாற்றம் (உட்பிரிவு) ஆணைகளும், 34,057 பட்டா மாற்றம் (உட்பிரிவு அற்ற) ஆணைகளும் என 38,960 பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இ -சேவை மையங்களின் சேவைகளை மேலும் செழுமைப்படுத்தும் விதத்தில் 01.01.2017 முதல் சிறு குறு விவசாயிகளுக்கான சான்றிதழ்கள், வாரிசுரிமை சான்றிதழ்கள், பிற்படுத்தப்பட்டோருக்கான சான்றிதழ்கள், விதவை சான்றிதழ்கள், மாற்றுக் கல்வி சான்றிதழ்கள், இரு பெண் குழந்தைகளுக்கான சான்றிதழ்கள், குடும்ப இடப்பெயற்சி சான்றிதழ்கள், சொத்துரிமை சான்றிதழ்கள், கலப்புத் திருமண சான்றிதழ்கள், ஆதரவற்ற விதவை சான்றிதழ்கள், வேலையின்மைக்கான சான்றிதழ்கள் என புதியதாக 14 வகையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

எனவே பொதுமக்கள் அனைவரும் இ-சேவை மையங்களை முழுமையாக பயன்படுத்தி தங்களுக்கு தேவையான அனைத்து வகையான சான்றிதழ்களையும் பெற்று பயனடையலாம், என மாவட்ட நிர்வகாம் தெரிவித்துள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.06.2026 - 22:03:34
Privacy-Data & cookie usage: