E-service centers provide alternative electronic family cards

பெரம்பலூர் : உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
்தியாளர;களிடம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் 1,69,278 அரிசி அட்டைகளும், 2,536 சர்க்கரை அட்டைகளும் என மொத்தம் 171823 எண்ணிக்கையிலான குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், குடும்ப அட்டைகளின் பயன்பாட்டினை எளிமைப்படுத்தும் வகையில் புதிய மின்னனு குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

அவற்றில் இதுவரை நான்கு கட்டங்களாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டு இதுவரை 1,19,948 அட்டைகள் பெறப்பட்டுள்ளது. அதில் 21.06.2017 வரை 1,02,462 அட்டைகள் செயலாக்கம் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

தற்போது குடும்ப அட்டை தொடர்பாக புதிய மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம், குடும்ப உறுப்பினர் பெயர் சேர்த்தல் விண்ணப்பம், உறுப்பினர் நீக்கல் விண்ணப்பம், முகவரி மாற்றம் விண்ணப்பம், குடும்ப தலைவர் மாற்றம் விண்ணப்பம், குடும்ப அட்டை ஒப்புவித்தல் அல்லது முடக்கம் செய்தலுக்கான விண்ணப்பம் ஆகியன கிராமப்பகுதிகளில் புதுவாழ்வுத்திட்டத்தின் மூலம் செயல்படும் பொது சேவை மையங்கள் மூலமாக பெறப்படுகின்றன.

இந்த விண்ணப்பங்களை வழங்க பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு வரவேண்டிய தேவை இல்லை. இந்த சேவைகளுக்கு ஆதார் அட்டையின் நகல் கட்டாயம் இணைத்திட வேண்டும். இணைய வழியாக பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களை வட்ட வழங்கல் அலுவலர்கள் பரிசீலனை செய்து உத்தரவு பிறப்பித்ததும், ஆணை நகலினை விண்ணப்பம் செய்த பொது சேவை மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.

தற்போது மின்னணு அட்டையில் திருத்தங்கள் செய்த பின்னர் புதியதாக மின்னணு அட்டை அச்சிட்டு பெற்றுக் கொள்ள ஏதுவாக வட்டாட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தமிழ்நாடு அரசுக் கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் நிறுவன இ-சேவை மையங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்கள் புதிய மின்னணு குடும்ப அட்டைகளை இங்கு அச்சிட்டு பெற்றுக் கொள்ளலாம். புதிய அட்டைகள் பெற்றுக்கொள்ள சேவைக் கட்டணம் ரூ.30- ஆகும். திருத்தங்கள் செய்ய ரூ.60 கட்டணமாக செலுத்தவேண்டும்.

மேலும், நியாய விலைக்கடையில் பொருள் இருப்பு விவரம் குறித்து அறிந்துகொள்ள PDS 101 என்றும், நியாய விலைக்கடை திறந்திருக்கும் நேரம் குறித்து தெரிந்துகொள்ள PDS 102 என்றும், பொருள் வாங்காமல் பொருள் வழங்கப்பட்டதாக தகவல் வந்தால் PDS 107 என்றும் தட்டச்சு செய்து 99809-04040 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மின்னனு குடும்ப அட்டைகளில் குடும்பத்தலைவரின் வண்ணப்புகைப்படம் பதிவேற்றும் பணி செய்யப்பட்டு வருகின்றது. பெரம்பலுhர; மாவட்டடத்தில் 42,874 குடும்ப அட்டைகளுக்கு குடும்பத்தலைவர;களின் வண்ணப்புகைப்படம் இல்லாமல் உள்ளது.

இதில் 16,765 குடும்ப அட்டைகளுக்கு புகைப்படம் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள அட்டைகளுக்கான குடும்பத்தலைவர் புகைப்படம் பெறும் பணி நடைபெற்று வருகின்றது.

மேலும், குடும்ப அட்டைதாரர்கள் குடும்பத்தலைவர்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய TNEPDS என்ற செயலியை (APP) பதிவிறக்கம் செய்து அதன் மூலம் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன், மாவட்ட வழங்கல் அலுவலர் பத்மாவதி, மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் சிவா, அரசு கேபிள் டி.வி.யின் தனி வட்டாட்சியர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!