அசானி புயல் எதிரொலி: பெரம்பலூர் மாவட்டத்தில் விடிய விடிய சாரல் மழை! அதிகாலையில் பலத்த மழை பெய்தது!

schedule
2022-03-22 | 01:02h
update
2022-03-22 | 01:10h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Eeffcet of Asani storm: Light showers in Perambalur district! Heavy rain in the early morning!

Advertisement

அசானி புயல் எதிரொலி காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றிரவு 9 மணி முதலே சில்லென்ற காற்றும், லேசான சாரல் மழையாக தொடங்கிய மழை நேரம் ஆக ஆக மழை அவ்வப்போது அதிகமாக பெய்யத் தொடங்கியது. அதிகாலை 5 மணிக்கு பிறகு பலத்த மழையாக மாறி பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொழியத் தொடங்கியது. சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் பெய்த மழை குளிர் காற்றாக தொடர்ந்து வீசி தூங்கும் மக்களை தாலாட்டியது.

நேற்று பகலில் கோடை வெயிலின் வெப்பம் மக்களை வாட்டி வதைத்த நிலையில், ஆறுதலாக இரவு மாறி வானிலை ஏழை எளிய மக்களை இதமான குளு குளு காற்றில் தூங்க செய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்றிரவு முதல் விடியும் வரையிலும் சாரல் மழையும், குளிர் காற்றும் வீசிய வண்ணம் இருந்தது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 18:10:44
Privacy-Data & cookie usage: