Education Loan Camp at Perambalur Collector’s Office: Loan assistance to all who are eligible; Collector Info!


பெரம்பலுார் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கல்விக் கடனுதவி முகாம் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது. எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட ஊரட்சி சேர்ன் குன்னம் .சி.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்தனர்.

105 மாணவ மாணவிகள் கல்விக் கடன் உதவி கேட்டு விண்ணப்பித்தனர். அரசு மற்றும் தனியார் வங்கிகளின் கலந்து கொண்டன. அவர்களில் 9 பேருக்கு முகாமிலேயே ரூ.52.40 லட்சம் மதிப்பிலான கடனுக்கான ஆணைகள் வழங்கப்பட்டது.

வரும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தின் 2 வது வாரத்தில் இன்னும் 2 கல்விக் கடன் முகாம்கள் நடத்தப் பட உள்ளது.

அனைத்து விண்ணப்பங்களும் முறையாக உரிய வங்கியாளர்கள் மூலம் பரிசீலிக்கப்பட்டு தகுதி வாய்ந்த அனைவருக்கும் கல்விக் கடனுதவி கிடைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் கற்பகம் தெரிவித்தார்.

மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தழுதாழை சி. பாஸ்கர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பரத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!