பெரம்பலூர் மாவட்டத்தில் கல்வி கடன் முகாம்; கலெக்டர் தகவல்.

schedule
2023-08-31 | 16:59h
update
2023-08-31 | 16:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Education Loan Camp in Perambalur District; Collector Information.

பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழக அரசின் ஆணைப்படி மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்தும் கல்வி கடன் முகாம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 07.09.2023 (வியாழக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த கல்வி கடன் முகாமில் தொழில்முறை படிப்பு (Professional Course) பயிலும் மற்றும் கல்வி கடன் பெற விரும்பும் அனைத்து மாணவ,மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

Advertisement

இந்த முகாமில் கலந்துகொள்ள வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பான் கார்டு, ஆதார் கார்டு ஆவணங்களையும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் மாணவர்களின் 10,12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12-ம் வகுப்பு மாற்று சான்றிதழ், குடும்ப வருமான சான்று, கல்லூரி சேர்க்கைக்கான சான்று, கல்விசான்று (bonafide Certificate) கல்லூரி கட்டண அறிக்கை (College fee structure) ஆகிய ஆவணங்களின் அசல் மற்றும் நகல் சான்றிதழை கொண்டு வர வேண்டும்.

கல்விகடன் முகாமிற்கு வருவதற்கு முன்பாக https://www.jansamarth.in இணையதளதில் விண்ணப்பித்து, விண்ணப்பித்த படிவத்தின் நகலை கொண்டு வர வேண்டும். அனைத்து மாணவ,மாணவிகளும் இம்முகாமினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.09.2026 - 01:27:59
Privacy-Data & cookie usage: