பெரம்பலூர் மாவட்ட, முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை

schedule
2018-08-27 | 11:21h
update
2018-08-27 | 11:23h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Educational scholarships from the Prime Minister’s Fund to the children of Perambalur district and former soldiers

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பாரத பிரதம மந்திரியின் நிதியிலிருந்து 2018-19-ம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

Advertisement

B.E., B.Tech, B.Ds., M.B.B.S., B.Ed., B.B.A., B.C.A., B.Pharm போன்ற தொழில் கல்வி முதலாமாண்டு பயிலும் சிறார்கள் மற்றும் பட்டய தொழிற்கல்வி முடித்து பொறியியல் இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்த சிறார்கள் 2018-19ம் ஆண்டிற்கான கல்வி உதவித் தொகை பெற www.ksb.gov.in என்ற முகவரியில் PMSS என குறிப்பிடப்பட்டுள்ள மின்னணு படிவத்தை மின்னஞ்சல் மூலமாக முழுமையாக பூர்த்தி செய்து, அதில் கூறப்பட்டுள்ள சான்றுகளை இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்து அனுப்பிட வேண்டும்.
அதன் விண்ணப்ப நகல் மட்டும் அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளிக்கவேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 15-11-2018 ஆகும். மேலும் விவரங்கள் அறிய, அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநரை 04329-221011 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 11:03:53
Privacy-Data & cookie usage: