elantalappatti special Manuniti anniversary ceremony in the village: Rs .17.69 lakh welfare payments

பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலரின் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா ஆலத்தூர் வட்டம், அடைக்கம்பட்டி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட எலந்தலப்பட்டியில் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் பி.வேலு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை, வருவாய்த் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, பிறபடுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறைகளின் அலுவலர்களும் தங்கள் துறைசார்ந்த திட்டங்கள் குறித்தும், இத்திட்டங்கள் மூலமாக பொதுமக்கள் பயன்பெறுவதற்குண்டான வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் வருவாய்த் துறை மூலம் நலிந்தோர் நலத்திட்டத்தின் கீழ் இயற்கை மரண உதவித்தொகை, முதலமைச்சரின் சமூக பாதுகாப்பி திட்டத்தின் கீழ் திருமண உதவித் தொகை, இயற்கை மரண உதவித் தொகை, விபத்து நிவாரணம் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா போன்ற திட்டங்களின் கீழ் 49 பயனாளிகளுக்கு ரூ.14,59,500- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், கால்நடை பராமரிப்புத் துறை மூலம் 1 பயனாளிக்கு ரூ.32,375- நாட்டுக்கோழி வளற்ப்பிற்கான தொகையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.3,000- மதிப்பிலான சலவைப் பெட்டிகளும்,

வேளாண்மைத் துறையின் மூலம் ரூ.2,75,000- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் என 57 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.17,69,875- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பி.வேலு வழங்கினார்.

இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், தனித் துணை ஆட்சியர்(ச.பா.தி) புஷ்பவதி, மாவட்ட பிற்ப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மோகன், வருவாய் வட்டாட்சியர் சீனிவாசன், வட்டாட்சியர் (ச.பா.தி) ஷாஜஹான் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!