முதியவர் தூக்கிட்டு தற்கொலை: பெரம்பலூர் போலீசார் விசாரணை!

schedule
2021-08-14 | 14:33h
update
2021-08-14 | 14:33h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Elderly man commits suicide by hanging: Perambalur police

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர், எம்ஜிஆர் நகரில் வசித்து வரும் காத்தான் மகன் மாவடையான் (வயது 65). இவருக்கு மலர்க்கொடி ( 55) என்ற மனைவியும் சத்யா, சரண்யா, காமாட்சி ஆகிய மூன்று மகள்களும், மணிகண்டன், பெரியசாமி என இரு மகன்களும் உள்ளனர். இதில் பெரியசாமியை தவிர அனைவருக்கும் திருமணம் நடந்து விட்டது. மாவடையானுக்கு சர்க்கரை வியாதியும், இரத்த கொதிப்பும் இருந்து வந்ததாகவும், இதனால் கடந்த 3 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே மாவடையான் இருந்து வந்ததாகவும், இன்று அதிகாலை 04.30 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றவர், வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் மலர்கொடி வெளியே வந்து பார்த்த பொழுது தங்கள் வீட்டிற்கு எதிரில் உள்ள முருகன் என்பவரின் வீட்டிற்கு அருகில் உள்ள முருங்கை மரத்தில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி மாவடையான் இறந்து தொங்கிக் கொண்டு இருந்தார். இதுகுறித்த மலர்கொடி கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 09:46:37
Privacy-Data & cookie usage: