தேர்தல் விதிகள்: துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு

schedule
2016-09-27 | 14:02h
update
2026-06-28 | 11:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Election rules: the order to hand over guns

உள்ளாட்சி தேர்தலையொட்டி ‘லைசென்ஸ் பெற்ற துப்பாக்கிகளை, காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும்’ தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியாகி உள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டில் 17.10.2016 மற்றும் 19.10.2016 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து படைக்கல உரிமதாரர்கள் தங்கள் வசம் உள்ள நிரப்புத்துப்பாக்கி / ரிவால்வர் / பிஸ்டல் / ரைபிள் / தோட்டா ரக துப்பாக்கி முதலான அனைத்து ரக துப்பாக்கிகளையும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைப்பு செய்திட வேண்டும்.

Advertisement

உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொண்ட பின்னர் படைக்கலன்களை மீண்டும் திரும்பப் பெற்றுக்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு காவல் நிலையத்தில் துப்பாக்கிகளை ஒப்படைக்கத் தவறும் உரிமதாரர்கள் மீது படைக்கலச்சட்டம் மற்றும் விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விபரம் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.06.2026 - 11:52:40
Privacy-Data & cookie usage: