Electricity Board notices to the public to avoid electrical accidents!

பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மு.அம்பிகா விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கீழ்கண்ட வழிமுறைகளை கடைபிடித்து மின் விபத்துக்களையும் அதன் மூலம் ஏற்படும் உயிர் சேதங்களையும் தவிர்க்க வேண்டும் என்றும்,

பொதுமக்கள் தங்களது வீடு, கடை, ஓட்டல் ஆகியவற்றில் வயரிங் செய்யும் போது தரமான வயரிங் சாமான்களை உபயோகித்தும் முறையான நில இணைப்பு கொடுத்தும் வயரிங் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், மின் கசிவால் ஏற்படும் விபத்தை தவிர்க்கும் பொருட்டு Earth Leakage circuit Breaker பொருத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பழுதான மின் உபகரணங்களை உடனடியாக மாற்றியமைத்து விபத்தினை தவிர்க்கும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஈரமான துணிகளை மின்கம்பத்திலோ, இழுவை கம்பியிலோ உலர்த்தக் கூடாது.

மின்கம்பம், இழுவைக் கம்பி மற்றும் மின்மாற்றியினை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வேலிக்கு அருகில் செல்லவோ, தொடவோ கூடாது.

மின்கம்பத்தில் பந்தல் அமைக்கவோ, விளம்பர பலகை பொருத்தவோ பயன்படுத்த கூடாது.

பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான ஆடு, மாடு முதலிய விலங்கினங்களை மின் கம்பத்திலோ அல்லது இழுவை கம்பியிலோ கட்டுவதை தவிர்த்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மின் பாதையின் மின் கம்பி அறுந்து கிடந்தால், பொது மக்கள் எவரும் அதனை தொடாமலும் அருகில் செல்லாமலும், உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

பொதுமக்கள் மின்பாதைக்கு அருகில் வீடுஃகட்டிடம் கட்டும்போது மின்பாதையிலிருந்து போதிய இடைவெளி விட்டு கட்ட வேண்டும். மின்பாதையின் அருகில் செல்லாமலும் மின்பாதையை தொடாமலும் மிகவும் கவனமாக கட்டுமான பணியினை செய்ய வேண்டும்.
வயல்களை சுற்றி மின்வேலி அமைத்தால் உயிர் இழப்பு ஏற்படும் என்பதால் மின்வேலி அமைத்தல் கூடாது. அவ்வாறு அமைத்தால் குற்ற பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறை தண்டனை வழங்கப்படும்.

மின் கம்பங்கள் பழுதடைந்த நிலையிலிருந்தாலோ, மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் மின் கம்பிகள் தொய்வாக இருப்பதை கண்டறிந்தாலோ, பொது மக்கள் அதனை தொடாமல் உடனடியாக அருகில் உள்ள மின்துறை அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

மின் வாரியத்தைச் சாராத நபர்கள் எவரும் மின் தடையை சரி செய்யும் பொருட்டு மின் கம்பத்திலோ, மின் மாற்றியிலோ ஏறி பணி செய்யக்கூடாது. மின் தடை ஏதும் ஏற்பட்டால் அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் தெரிவித்து வாரியப் பணியாளர் மூலம் மின் தடையை சரி செய்து கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் தங்களது சொந்த இடங்களில் பணிகள் மேற்கொள்ளும் போது, அருகில் மின்பாதைஃமின்கம்பிகள் சென்று கொண்டிருந்தால் அதனருகில் செல்லாமலும், மின் பாதையை தொடாமலும் மிகவும் கவனமாக பணியை மேற்கொள்ள வேண்டும்.

டிராக்டர் மற்றும் லாரியில் கரும்பு போன்றவற்றை அளவுக்கதிகமாக ஏற்றி செல்லும் போது அருகில் உள்ள மின்பாதைஃமின்கம்பிகளை உரசாமல் மிகவும் கவனமாக செல்ல வேண்டும்.
மின்மாற்றி கட்டமைப்பின் அருகிலோ அல்லது மின்கம்பிகளுக்கு அடியிலோ வாகனங்களை நிறுத்தி பொருட்களை ஏற்றி இறக்க கூடாது.

பொதுமக்கள் தங்களது சொந்த இடங்களில் மின்சாரம் தொடர்பான பணியினை மேற்கொள்ளும்போது மின் இணைப்பை மின் நிறுத்தம் செய்து, மீண்டும் உறுதிப்படுத்திய பிறகு பணியை கவனமாக செய்யுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

பழுதடைந்த மின்கம்பம் மற்றும் அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் பற்றிய தகவலை உடனடியாக றூயவளயிp எண் : 9486111912 மூலம் தெரிவிக்கலாம். மேலும் கணினி மயமாக்கப்பட்ட மின் தடை புகார் பதிவு மையம், பெரம்பலூர் மின் பகிர்மான வட்டம், பெரம்பலூர் தலைமை இடத்தில் இயங்கி வருகிறது. எனவே பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த மின்நுகர்வோர்கள் மின் தடைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய கட்டணமில்லாத தொலைபேசி எண் 1912 மற்றும் 18005992912 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தங்கள் மின் தடை புகாரை பதிவு செய்தால், தங்கள் இடம் தேடி வந்து, மின் வாரிய ஊழியர்கள் மின் தடையை சரி செய்வார்கள். மேலும் உதவி மின் பொறியாளர், மின்தடை புகார் மையம், பெரம்பலூர் அவர்களையும் அலைபேசி எண்: 9498392129 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகாரினை தெரிவிக்கலாம்.

தற்பொழுது மின்தடை புகாரினை உடனுடனுக்கு நிவர்த்தி செய்து தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்கு “மின்னகம்”; என்ற சிறப்பு மின்நுகர்வோர் சேவை மையம் 20.06.2021 முதல் செயல்பட்டு வருகின்றது. இந்த மையத்தினை 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகாரினை தெரிவித்தால், மின்வாரியத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் எவரும் தன்னிச்சையாக செயல்பட்டு மின்தடையினை சரிசெய்ய முற்படவேண்டாம் எனவும் அதில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!