Electricity shutoff near in Perambalur Nakkasalem surrounding areas tomorrow : TNEB Notice
பெரம்பலூர் அருகே உள்ள நக்கசேலம் சுற்றுப் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தின் பெரம்பலூர் கோட்டஉதவி செயற் பொறியாளர் (கிராமியம்) க.அறிவழகன் விடுத்துள்ள அறிக்கை :
பெரம்பலூர் மாவட்டம் மங்கூன் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே மங்கூன் துணை மின் நிலைத்திற்கு உட்பட்ட குரும்பலூர், மேலப்புலியூர், திருப்பெயர், கே.புதூர், நாவலூர், மூலக்காடு, ஈச்சம்பட்டி, லாடபுரம், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன்,
நக்கசேலம், அடைக்கம்பட்டி, சிறுவயலூர், குரூர், மாவலிங்கை, விராலிப்பட்டி, வேலூர், சத்திரமனை, பொம்மனப்பாடி, கீழக்கணவாய், மின் பகிர்மானத்தில் உள்ள சில பகுதிகளில்
நாளை காலை 9.45 மணிமுதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சார வினியோகம் இருக்காது, என தெரிவித்துள்ளார்.