Electricity workers in Perambalur stressed the demands on behalf of the Union Joint Action Committee; Dharna struggle.

மின்வாரிய தலைவரின் தொழிலாளர் பொறியாளர் விரோத போக்கினை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் அறிவித்ததை தொடர்ந்து பெரம்பலூர் நான்கு ரோடு மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் வி.மதியழகன், எல்பிஎப், கே.பழனிவேல் ஐக்கியசங்கம், எம்.சென்னாள் ஏஇஎஸ்யு, டி.தமிழரசன், பொறியாளர் சங்கம், ஆல்பர்ட்அருமைராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். கே.கண்ணன், எஸ்.சங்கர், எ.மணிமாறன், கே.பரசுராமன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் என்.பெரியசாமி ஏஇஎஸ்யு, கே.ராஜேந்திரன், பொறியாளர் சங்கம், எல்பிஎப் மாநில துணைத் தலைவர் பொ.மலையாண்டி, வட்ட துணைத் தலைவர், பி.செல்வராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிஐடியு மாநில செயலாளா; எஸ்.அகஸ்டின் நிறைவுரை ஆற்றினார். மின் வட்டங்களில் பணியாற்றி வரும் ஊழியர், பொறியாளர் அலுவலர்களின், பதவிகளை நீக்கக்கூடாது, துணை மின்நிலையங்களை பராமரிக்க தனியாரிடம் ஒப்படைக்ககூடாது, பதவி உயர்வுகளையும், புதிய வேலை வாய்ப்புகளையும் பறிக்கக்கூடாது, அரசாணை 304 ஐ மின் வாரியத்தில் அமலாக்கக்கூடாது, ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. முடிவில் கோட்ட செயலாளர் பி.நாராயணன் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!