மின்னணு ஆளுமை திட்டம்.. முன்னாள் படைவீரர்கள் விபரங்களை அளிக்க உத்தரவு

schedule
2017-05-08 | 13:18h
update
2026-06-27 | 06:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

முன்னாள் படைவீரர்கள் தங்களது விபரங்களை முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

மின்னணு ஆளுமை (E-Governance) திட்டத்தின் கீழ் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து முன்னாள் படைவீரர்கள் / விதவையர்களும் தங்கள் விபரங்களை பதிவு மேற்கொள்ள ஏதுவாக 24 வகையான தகவல்கள் / ஆவணங்களை முன்னாள் படைவீரர் நல அலுவலக வேலை நாட்களில் சமர்ப்பிக்கும்படி கோரப்படுகிறார்கள்.

Advertisement

ஏற்கனவே இவ்வலுவலகத்தில் மின்னணு ஆளுமை (E-Governance) குறித்து ஆவணங்கள் சமர்ப்பித்து பதிவு மேற்கொண்ட முன்னாள் படைவீரர்கள் / விதவையர்கள் மீண்டும் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இதுவரை மின்னணு ஆளுமை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்காதவர்கள் மட்டும் உரிய படிவத்துடன் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வலுவலகம் வாயிலாக நலத்திட்ட உதவிகள் வழங்கிட ஏதுவாக அனைத்து முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையர்களும் தவறாமல் ஆவணங்களை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 06:49:33
Privacy-Data & cookie usage: