Employee orders to give 62 persons to a job in Namakkal
நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமிற்கு வேலை வாய்ப்பு அலுவலர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். இதில் 10,12 வகுப்புகள், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்த 247 பேர் பங்கேற்றனர்.
இதில் 20க்கும் மேற்பட்ட தனியார்த்துறை நிறுவனங்கள் ஊழியர்களை நேர்காணல் செய்தன. இதில் 74 பேர் தேர்வு செய்யப்பட்டு நியமன உத்தரவு வழங்கப்பட்டது. மேலும் 62 பேர் இரண்டாம் கட்ட தேர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இம்முகாமில் இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர்கள் ராதிகா, செல்வக்குமார், ராஜ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.