சார்நிலை பணியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு , அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்பு

schedule
2016-11-23 | 17:13h
update
2026-06-27 | 23:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Employee Subordinate to applicants for work, on behalf of the Government of Free Training Class in perambalur

பெரம்பலூர் : மத்திய அரசின் Staff Selection Commission ஆண்டு திட்ட அறிக்கை 2016 – 2017-இன்படி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சார்நிலை பணியாளர் பணியிடங்களுக்கான (Combined Higher Secondary Level (10+2) Examination 2016) தேர்வில் Postal Assistant, Data Entry Operator, Lower Division Clerk, Court Clerk, ஆகிய பதவிகளுக்கு 5371 பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் 25.11.2016 ஆகும். மேலும் விவரங்களை www.ssconline.nic.in என்ற இணைய தளத்தில் அறிந்துகொள்ளலாம்.

மேற்படி தேர்விற்கு விண்ணப்பம் செய்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள படித்த வேலை நாடுநர்கள் பயன்பெறும் நோக்கில் இலவச பயிற்சி வகுப்புகள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இப்பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்து இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் தேர்விற்கு விண்ணப்பம் செய்த விண்ணப்ப நகலுடன் 30.11.2016-க்குள் அலுவலக வேலை நாட்களில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விருப்ப விண்ணப்பம் சமர்ப்பித்து பயன்பெறலாம், என வேலைவாய்பபு அலுவலகம் சார்பில் தெரிவிக்க்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 23:17:31
Privacy-Data & cookie usage: