மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் வேப்பந்தட்டையில் வேலைவாய்ப்பு முகாம்

schedule
2018-04-11 | 17:25h
update
2026-06-27 | 01:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Employment Campaign for Women in Rural Livelihood Movement (Women’s Program)

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் படித்த இளைஞர்கள் மற்றும் மகளிர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சு.தேவநாதன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Advertisement

வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (11.04.2018) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்); சார்பாக படித்த இளைஞர்கள் மற்றும் மகளிர்களுக்காக நடந்தப்பட்ட வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாமில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் சு.தேவநாதன் கலந்து கொண்டார்.

மேற்படி வேலை வாய்ப்பு முகாமில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, நாமக்கல் மற்றம் பெரம்பலூர் போன்ற நகரங்களில் உள்ள பிரபல எம்.பி.எம் டெக்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட், மகேந்திரா கார் டீலர்சிப், ஐ.சி.ஐ.சி.ஐ அகாடமி, எம்.ஆர்.எப் லிமிடெட், பைன்பிட், டி.வி.எஸ் கம்பெனி உள்ளிட்ட 21 நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான தகுதியான 93 நபர்களை தேர்வு செய்தனர். இம்முகாமில் 93 பெண்கள் மற்றும் 69 ஆண்கள் உட்பட 162 நபர்கள் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அர.ஜெயச்சந்திரன், உதவித் திட்ட அலுவலர் துர்காசெல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.மரியதாஸ், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 01:14:15
Privacy-Data & cookie usage: