தொழில் வளாகங்கள் வாடகைக்கு பெற தொழில் முனைவோர்கள் விண்ணப்பிக்கலாம்: பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா

schedule
2020-06-24 | 11:26h
update
2020-06-24 | 11:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Entrepreneurs can apply for the rent of industrial complexes: Perambalur Collector V. Santha

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியம், நன்னை ஊராட்சியில் 6617 ச.அடியில் அமைந்துள்ள 3 கட்டிடங்கள், ஓலைப்பாடி ஊராட்சியில் 8546 ச.அடியில் அமைந்துள்ள 3 கட்டிடங்கள், கீழப்புலியூர் ஊராட்சியில் 3965 ச.அடியில் அமைந்துள்ள 3 கட்டிடங்கள், முருக்கன்குடி ஊராட்சியில் 5907 ச.அடியில் அமைந்துள்ள 2 கட்டிடங்கள் வாடகை அடிப்படையில் ஆயத்த ஆடைகள் தயாரித்தல் மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பது தொடர்பான பிற தொழில் நிறுவனங்களுக்கு தொழில் தொடங்கி அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் பொருட்டு வாடகைக்கு விடப்படவுள்ளது. தொழில் வளாகங்களை வாடகைக்கு பெற ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களிடமிருந்து விருப்ப விண்ணப்பங்கள் ஜுலை 3.அன்று மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், இதுகுறித்த விரிவான விவரங்களை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலக பணி நேரங்களிலும்,www.perambalur.nic.in இணையதளம் வாயிலாகவும் அறிந்துகொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 19:28:46
Privacy-Data & cookie usage: